AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தோனேசியாவில் இருந்து வந்த கப்பல்.. டன் கணக்கில் சிக்கிய கொட்டைப்பாக்கு.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்!

Thoothukudi Betel Nuts Smuggling : இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு 25 கிலோ கொட்டை பாக்குகளை கடத்தி வந்த இருவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இதில், தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தோனேசியாவில் இருந்து வந்த கப்பல்.. டன் கணக்கில் சிக்கிய கொட்டைப்பாக்கு.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்!
கடத்தலில் கைதான இருவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Oct 2026 22:07 PM IST

இந்தோனேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலமாக சுமார் 25 டன் கொட்டை பாக்குகள் கடத்தி வந்த இருவரை தூத்துக்குடியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கொட்டைப்பாக்குகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து அதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து டன் கணக்கில் கொட்டை பாக்குகள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாட்டில் இருந்து கொட்டை பாக்குகள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தோனேஷியா கப்பலில் கண்டெய்னரில் 25 டன் கொட்டை பாக்கு கடத்தல்

அந்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்த ஒரு கப்பலில் இருந்த கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், 40 டன் எடை கொண்ட கண்டெய்னர் பெட்டியில் டன் கணக்கில் கொட்டை பாக்குகள் மூட்டை மூட்டைகளாக இருந்தது தெரியவந்தது. அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: என்னையா கேலி செய்கிறாய்.. என்ன செய்கிறேன் பார்.. நண்பனை கோடாரியால் பதம் பார்த்த தொழிலாளி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!

கொட்டைப் பாக்கு கடத்தலில் ரூ.2 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு

இதில், 25 டன் கொட்டை பாக்கு மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதனை இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் மூலமாக முறையான ஆவணங்கள் இல்லாமல் சுமார் ரூ. 2 கோடிக்கு கடத்தல்காரர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக, களத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடியை சேர்ந்த சொர்ண ராஜ் ( 37 வயது) மற்றும் கேரள மாநிலம், கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் ( 43 வயது) ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இருவர் கைது- மேலும் சிலருக்கு வலை வீச்சு

தொடர்ந்து, அவர்களை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா. இந்தோனேசியாவில் இருந்து கொட்டைப்பாக்குதல் நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து புலனாய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், இதில் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: சேலம் பிரபல ரவுடி கொலை.. திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது எப்படி.. கைதான 7 பேர் பகீர் வாக்குமூலம்!

Follow Us