AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யும் திட்டம்.. பின்வாங்கிய தவெக அரசு.. நிர்மல்குமார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்!

TN Govt Procure Electricity Cost of Rs 41.50 Per Unit: தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50- க்கு கொள்முதல் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசியல் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யும் திட்டம்.. பின்வாங்கிய தவெக அரசு.. நிர்மல்குமார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்!
தமிழக மின்வாரிய துறை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 27 Oct 2026 19:52 PM IST

தமிழகத்தில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை ஈடு செய்வதற்கு வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50 க்கு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 2,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 2026 டிசம்பர் முதல் 2027- ஆம் ஆண்டு மே மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தேவையை சமாளிப்பதற்காக இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவசரகால குறுகிய காலை மின் கொள்முதல் ஒப்பந்தம்

இதற்கு முந்தைய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒரு யூனிட் ரூ. 35 முதல் ரூ. 37.50- க்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மின் தேவை மேலும் அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை ரூ. 41.50- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லாத மின் விநியோகத்தை உறுதி செய்யவும், அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை தவிர்க்கவும் இந்த அவசரகால குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!

ஒரு யூனிட் ரூ.31.99 முதல் ரூ. 37 வரை கொள்முதல் செய்ய திட்டம்

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டை சரி செய்வதற்கு ஏற்கனவே தமிழக அரசு வெளிச்சந்தையில் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 31.99 முதல் ரூ. 37 வரை (சராசரியாக ரூ. 35) தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் விவாதம்

இந்த நிலையில், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு இந்தியாவின் மிக அதிக விலையான ரூ. 35- க்கு மின்சாரம் வாங்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது. தற்போது, அதைவிட கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக வெளியான புதிய அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார். அதிக விலைக்கு விடப்பட்டுள்ள டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50-க்கு கொள்முதல் செய்ய இருப்பதாக விடுக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பயணிகள் கனிவான கவனத்துக்கு.. இனி ரயில் கவுண்டரிலும் காப்பீடு உண்டு.. அமலானது புதிய விதி!

Follow Us