AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!

Armstrong Murder Case CBI File Status Report : தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரகள் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில், என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Oct 2026 21:58 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விரிவான நிலை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. சென்னை மாவட்டம், பெரம்பூரில் கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட சென்ற போது, இருசர வாகனங்களில் ஷொமேட்டோ ஊழியர்கள் போல உடை அணிந்து வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் பள்ளி மற்றும் கே. வி. விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்

இந்த நிலையில், அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ விசாரணையின் விரிவான நிலை அறிக்கையை 2 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விரிவான நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேரில் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. இரவில் சிறையில் அடைப்பு?

கொலையில் தொடர்புடைய 10 பேர், கொலைக்கு உதவியர்கள் சில பேர்

இதில், பொன்னை பாலு, திருமலை, அருள், திருவேங்கடம், மணிவண்ணன், ராமு, சந்தோஷ், சிவா, விஜய் மற்றும் கோகுல் ஆகிய 10 பேர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பு சென்று அவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஆயுதங்கள் வழங்கியது. நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது, பண உதவி செய்தது உள்ளிட்ட சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் இரு குற்றவாளிகள்

இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய நபரான செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் சம்பவம் நடப்பதற்கு 1 மாதத்துக்கு முன் பிரதான குற்றவாளியான அருள், திருவேங்கடத்தை சந்தித்து பேசி உள்ளார். வேறு யாரேனும் வெளிநாட்டில் இருந்து செயல்பட்டுள்ளனரா என்பதை கண்டறிவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

Follow Us