AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிப்பு அரக்கன் அன்பில் மகேஷ் கைது.. இனி திமுகவுக்கு திக்.. திக்.. நிமிடங்கள் தான்.. தவெக காட்டமான விமர்சனம்!

TVK IT Wing Criticized DMK : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் திமுகவுக்கு திக்.. திக்.. நிமிடங்கள் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் பதிவிட்டுள்ளது .

நடிப்பு அரக்கன் அன்பில் மகேஷ் கைது.. இனி திமுகவுக்கு திக்.. திக்.. நிமிடங்கள் தான்.. தவெக காட்டமான விமர்சனம்!
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Oct 2026 20:12 PM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அனுமதி ஆகியவற்றை பெற்று தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்புடையதாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வரும் காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு திக்.. திக்.. நிமிடங்கள்… நாங்கள் தான் ஆலமரம்.. தமிழகத்தில் யார் ஆட்சி செய்தாலும் நாங்கள் தான் ஆளும் கட்சி என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா. ஒருபுறம் பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி

மறுபுறம் அரசு வேலைக்காக பல ஆண்டுகள் இரவு, மகள் பாராமல் படித்து வரும் இளைஞர்களின் கனவுகளை பணத்துக்காக சிதைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வியையும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளையும் ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு உத்தமர் வேடம் போடுவதற்கு கூசவில்லையா சீனியர் ஜெனரேஷனல் அபியூசர்… கொள்கை தான் உயிர் என்று மேடைகளில் முழக்கம் விட்டு விட்டு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது தான் இந்த பண்ணையார் கட்சியின் வரலாறு.

மேலும் படிக்க: கே.என்.நேருவுக்கு பின்னடைவு.. ரூ. 634 கோடி லஞ்சப் புகாரில் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

திருமண மேடைகளில் புலம்பி தள்ளும் மு.க.ஸ்டாலின்

6 மாதத்தில் இந்த ஆட்சி கலைந்து விடும் என்று ஏறும் கல்யாண மேடைகளில் எல்லாம் மைக்கை பிடித்து புலம்பும் ஸ்வீட் அங்கிள்… இனிவரும் காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி மட்டும் அல்லாமல். ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேச தொடங்குவார்கள். அதற்கும் சேர்த்து புலம்பி தள்ளுங்கள் என தவெக ஐ. டி. விங் காரசாரமாக விமர்சனம் செய்துள்ளது. முன்னதாக, தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றதிலிருந்து 6 மாதங்களில் ஏராளமான கொலைகள், குழந்தைகள் காணாமல் போவதாகவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

துப்பாக்கி ஹீரோ துப்பில்லாத ஹீரோ

அத்துடன், துப்பாக்கி ஹீரோ என பாராட்டியவர்கள் தற்போது துப்பில்லாத ஹீரோ என முதல்வர் விஜயை விமர்சிப்பதாக கடுமையாக சாடி இருந்தார். மேலும், பட்டு வேஷ்டி அணிவது, கோட் சூட் போடுவது, கான்வாயில் வலம் வருவது என மூடநம்பிக்கையில் இருந்து முதல்வர் விஜய் எப்போது வெளிவருவார் என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசியல் காழ்ப்புணர்வோடு அன்பில் மகேஷ் கைது.. தவெக அரசுக்கு கண்டனம் – மு.க ஸ்டாலின்..

Follow Us