AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இளைஞர் களம் காண வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை அழைப்பு!

We The Leaders Founder Annamalai : தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வேண்டும் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இளைஞர் களம் காண வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை அழைப்பு!
அண்ணாமலை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Oct 2026 19:45 PM IST

கரூர் மாவட்டம், தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் இன்று திங்கள்கிழமை ( அக்டோபர் 26- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தின் இறுதி நிகழ்ச்சி பொதுக் கூட்டத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று இருந்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். தனி மனிதனை அடையாளப்படுத்தாமல், பிரச்சனைகளை அடையாளப்படுத்தினால் மட்டுமே அதற்கான தீர்வு கிடைக்கும். இளைஞர்கள் தங்கள் கிராமப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஓர் அமைப்பில் இருந்தவாறு பணி புரிய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் போட்டி

வீ த லீடர்ஸ் அமைப்பில் சுமார் 22 லட்சம் பேர் உள்ளனர். அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்றால் தான் உள்ளாட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தி மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி உள்ளனர். கேரளம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

வீ த லீடர்ஸ் அமைப்பினர் விழிப்புணர்வு நடைபயணம்

அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்க வேண்டும். பெரிய தாதாம்பாளையத்தில் உள்ள ஏரியை வனத்துறை வசம் இருந்து மீட்டெடுத்து ஊர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வீ த லீடர்ஸ் அமைப்பு கடந்த 4 நாட்களாக ஆண்டி செட்டி பாளையத்தில் இருந்து பெரிய தாதாம்பாளையம் வரை அனைவரும் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, கிராம மக்களை சந்தித்து ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நடைபெற நிகழ்ச்சி நடைபெற்றது.

அமராவதி ஆற்றின் உபரி நீரால் ஆதாரத்தை மேம்படுத்தவேண்டும்

53 ஹெக்டேர் அளவு இருக்கக்கூடிய இந்த பெரிய தாதாம்பாளையம் ஏரி பயன்பாட்டுக்கு வந்தால் தான் அமராவதி ஆற்றின் உபரி நீரை எங்கு கொண்டு வந்து வறட்சி பகுதிகளுக்கு நீர் ஆதாரத்தை மேம்படுத்த முடியும். இதன் காரணமாக தமிழக அரசிடம் முறையிட்டு சேலம் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடிதம் பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மதுரையில் சோக சம்பவம்.. வீட்டு முன் விளையாடிய சிறுவன் மாயம்.. மறுநாள் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை!

Follow Us