என்னப்பா இது… அஸ்மிதாவால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் மற்றும் வினோத்!
Bigg Boss Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் 8வது வாரத்தின் தொடக்கமே ஓபன் நாமினேஷன் மற்றும் அன் ஃபில்டர் கேள்விகள் என விறுவிறுப்பாக இருந்தது. அந்த விதத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் அஸ்மிதாவால் ஜேசன் மற்றும் வினோத் பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது குறித்து காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த வாரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுப்பாளராக தொகுத்திருந்தார். இந்நிலையில் பல்வேறு கேள்விகளை போட்டியாளர்களிடம் எழுப்பி மற்றும் கேள்விகளால் அனைவரையும் சூறையாடியிருந்தார். மேலும் கடந்த வாரத்தில் எவிக்ஷன் ப்ரீ பாஸ் ஷமாவுக்கு இருந்த நிலையில், அவர் அந்த பாஸை பயன்படுத்தாமல் அவர் வெளியேறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 50 நாட்களில் நிலையில், தற்போது 8வது வாரத்தில் உள்ள நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலே ஓபன் எவிக்ஷன் மற்றும் அன் ஃபில்டர் கேள்விகள் என தொடங்கிய நிலையில், சிறப்பாக அமைந்திருந்தது. அந்த விதத்தில் இன்று (26/10/2026) வெளியான 4வது ப்ரோமோவில், ஜேசன் மற்றும் வினோத் பாபு இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நித்யா ரெட்டி-யாக சாய் பல்லவி… ஓம் படத்திலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!
அஸ்மிதாவால் ஜேசன் மற்றும் வினோத் பாபு இடையே ஏற்பட்ட பிரச்சனை:
இந்த ப்ரோமோவில், ஜேசன் மற்றும் வினோத் பாபு இடையே பிரச்சனை இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜேசன் மற்றும் வினோத் இருவருமே ப்ளூ டீம் டாஸ்கின்போது, ஜேசனிடம் கூறியிருந்த விஷயத்தை அஷ்மிதா தன்னிடம் சொன்னதாக வினோத் பாபா கூறியிருந்தார் என அதில் வினோத் பாபு கூறினார்.
இதையும் படிங்க: பேக் டூ பேக் நெருப்பான கேள்விகள்… போட்டியாளர்கள் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்ட கேள்வி – வைரலாகும் ப்ரோமோ!
மேலும் உடனே ஜேசன், நீங்க எனக்கு உண்மையாக இல்லை அதனால் நானும் உங்களுக்கு உண்மையாக இல்லை என கூறியிருந்தார். அதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக அஷ்மிதா இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 50வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day50 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/na1osfwxkT
— Vijay Television (@vijaytelevision) October 26, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்த நிலையில், மொத்தம் 15 போட்டியாளர்களுடன் உள்ளது. ஷமா கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில், மொத்தம் 15 போட்டியாளர்களே உள்ளனர். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இந்த வாரத்தில் விறுவிறுப்பான டாஸ்குகள் இனி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.