சாதிகாவும் நீயும் பேசுறது காதலா? டைம்பாஸா? – பிக்பாஸில் முனியம்மாள் கேட்ட கேள்வி… உறைந்துபோன முகேஷ்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்சியில் இன்று நடைபெறும் டாஸ்க் ஒன்றில் போட்டியாளர் முனியம்மாள் முகேஷிடம் அவருக்கும் சாதிகாவிற்கும் இடையே உள்ள உறவு என்ன என்பது குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பியது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மீண்டும் வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டனர். மொத்தம் 24 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதுவரை 7 வாரங்கள் முடிவடைந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 8-வது வாரத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் இந்த 8-வது வாரமும் அப்படியே சேலும் என்ரு எதிர்பார்க்கபப்டுகின்றது. அதன்படி இந்த 8-வது வாரத்திற்கான நாமினேஷன் எப்படி நடைபெறுகின்றது என்பது குறித்து முன்னதாக வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவைப் பார்க்கும் போது வீட்டில் உள்ள 15 நபர்களும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அது மட்டும் இன்றி இந்த வாரம் கொழுத்திபோடும் விதமாக பிக்பாஸ் ஒரு டாஸ்கை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் அன் ஃபில்டர் என்று டாஸ்கை வைத்துள்ளார். அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களிடையே கேட்க நினைக்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்கிறார்கள்.




பிக்பாஸில் முனியம்மாள் கேட்ட கேள்வி… உறைந்துபோன முகேஷ்:
அதில் போட்டியாளர் முனியம்மாள் முகேஷிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது முகேஷிடம் முனியம்மாள் உனக்கும் சாதிகாவிற்கும் இடையே உள்ள உறவு என்ன? நீங்க காதலிக்கிறீர்களா அல்லது டைம் பாஸிற்காக பேசுகிறீர்களா இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு மட்டும் இல்லை, இந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் பார்வையாளர்களும் தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ‘சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்’ – செஃப் தாமுவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day50 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/88wF4KgjwF
— Vijay Television (@vijaytelevision) October 26, 2026
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் சேதுபதியின் பத்தா படக்குழு – வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்