Vijay Antony: அப்பாவ போல… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
Appa Kutty First Single: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மக்களிடையே பிரபலமான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் அப்பா குட்டி என்ற படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான அப்பாவ போல என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சினிமாவில் பன்முக திறமைகள் கொண்ட நடிகர்கள் பலரும் இருந்துவருகிறார். அதில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருப்பவர்தான் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்த நிலையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக நூறு சாமி (Nooru Saami) என்ற திரைப்படம் வெளியானது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா உள்ளியா நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் அப்பா குட்டி (Appa Kutty).
இந்த படத்தை அறிமுக இயக்குநர் மு.மாறன் (Director Mu.Maran) இயக்க, விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அவரே இசையமைத்துள்ள நிலையில், தற்போது இந்த அப்பா குட்டி திரைப்படத்திலிருந்து “அப்பாவ போல” (Appava Pola) என்ற முதல் சிங்கிளை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: ஏன் ராவணனாக நடிக்கிறீர்கள்? என பலர் என்னிடம் கேட்டார்கள் – யாஷ் விளக்கம்!
விஜய் ஆண்டனி வெளியிட்ட அப்பா குட்டி படத்தின் அப்பாவ போல பாடல்:
#AppavaPola First Single is here – https://t.co/YRw4eR8o9L
A lilting composition that’ll grow to be an anthem for father-daughter love 🤍
Only on #VijayAntonyMusic 🎧
#Appakutty ♥️
Written & Directed by: @mumaran1
A @Vijayantony Musical 🎵
@mrsvijayantony @Preethioffl @haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar @dhivakargj @lizzieantony @MunnarRamesh @748b733cebe946f @sugaa14 @puthiyaparithi @mahesh25071985 #thamuruganandam @cinemapayyan @ProRekha @PROSaiSatish
— vijayantony (@vijayantony) October 23, 2026
அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்:
இந்த அப்பா குட்டி படத்தை அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இதை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பு என மூன்று பணிகளை செய்திருக்கிறார். அந்த விதத்தில் இந்த படமானது சிறப்பான எமோஷனல் கதையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிஸ் மற்றும் 29 போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓம் பட ஷூட்டிங்கில் கையில் காயம்.. அதை கண்டுகொள்ளாமல் தீவிரமான ஷூட்டிங்கில் தனுஷ் – டாக்டர் சொன்ன அட்வைஸ்!
மேலும் ஜன நாயகன் படத்தில் குழந்தை மமிதாவாக நடித்த லிதான்யா சிவபாலனும் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படமானது அப்பா மற்றும் பெண் குழந்தையின் பாசப் போராட்டம் குறித்த வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படம் வெளியாகும் அதே நாளில் சூர்யாவின் சீன் படமும், அதற்கு முந்தைய நாளில் ராமாயணா படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.