Dhanush: ஓம் பட ஷூட்டிங்கில் கையில் காயம்.. அதை கண்டுகொள்ளாமல் தீவிரமான ஷூட்டிங்கில் தனுஷ் – டாக்டர் சொன்ன அட்வைஸ்!
Dhanush Injury: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு பணிகள் மற்றும் திறன்களை மக்களிடையே காட்டிவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓம். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. அதற்க்கு டாகடர் கொடுத்த அட்வைஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோலிவுட் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஓம் சாப்டர் 1: உத்திரம் (OM Chapter 1: Udhiram). இந்த திரைப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்க, தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக்கிவருகிறார். இந்த படத்தில் தனுஷ், மம்முட்டி (Mammootty), சாய் பல்லவி (Sai Pallavi), ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறதாம்.
அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. தனுஷின் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதை அடுத்து, ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஏன் ராவணனாக நடிக்கிறீர்கள்? என பலர் என்னிடம் கேட்டார்கள் – யாஷ் விளக்கம்!
ஓம் படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷுக்கு காயம்:
அந்த வீடியோவில், ஒரு தீவிரமான கோடாரி சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது நடிகர் தனது கையில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், கோடாரி அவரது கையில் படுவது போல் தெரிகிறது, ஆனால் அவர் அந்தக் காட்சி முடியும் வரை தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் நடிகரும் படக்குழுவினரும் காயம் குறித்த விவரங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ
ஓம் பட சண்டைக் காட்சியின்போது தனுஷுக்கு காயம் குறித்த எக்ஸ் பதிவு:
இதுல எதுக்கு தனுஷை ட்ரோல் பண்றாங்கனு தெரியல
சினிமா கோடாரி தான் ஆனா அடிக்கும் போது அதோட பின்புறம் கைல நரம்புல பட்டு அதனால ஒரு நிமிஷம் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கும்.
நமக்கும் Elbowல எங்கயாவது இடிச்சா ஷாக் அடிச்ச மாதிரி கையை உதறுவோம்ல அது மாதிரி தான். https://t.co/tFGFP8uJhE
— Prakash Mahadevan (@PrakashMahadev) October 21, 2026
காயத்திற்குப் பிறகு ஏற்படும் வலியை ஏன் புறக்கணிக்கக் கூடாது – டாக்டர் சொல்லும் அட்வைஸ்:
மும்பை பிரபல தனியார் மருத்துவமனை எலும்பியல் துறை மூத்த ஆலோசகரான டாக்டர் அனுப் கத்ரியின் கூற்றுப்படி, ஷூட்டிங்கின்போது காயம் ஏற்பட்ட நிலையில், அதை தொடர்ந்து தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியையும் காட்டலாம், ஆனால் அது காயம் குணடாகும் நேரத்தை தாமதப்படுத்தும். காயத்தில் வலி இருந்தபோதிலும் வேலையைத் தொடர்வது நிச்சயமாக அர்ப்பணிப்புதான், உறுதி மற்றும் நேர்மையின் அடையாளம் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும், காயத்தை கண்டுகொள்ளாமல் குணமடைவதைத் தாமதப்படுத்தி, விரும்பத்தகாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
காயம் குணமாக டாக்டர் சொல்லும் அட்வைஸ்:
அந்த மருத்துவர், பாதிக்கப்பட்ட பகுதியை முறையான பாதுகாப்பு மற்றும் ஓய்வு கொடுக்கவேண்டுமாம். மேலும் முறையான மருத்துவ பரிந்துரை இல்லாமல் கடினமான செயல்களை மீண்டும் தொடங்குவது, கயாத்தில் வீக்கம் மற்றும் வலியையும் மோசமாக்குமாம். தசைகள், தசை நாண்கள், தசை நார்கள் அல்லது எலும்புகளை சேதப்படுத்தவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளதாம். இந்த ஆபத்து, காயத்தின் வகை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தது இருக்கும் என்று கூறியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, ஒரு தசைப்பிடிப்பு, பாதிக்கப்பட்ட தசை குணமடைவதற்கு முன்பு மீண்டும் மீண்டும் அந்த காயமடைந்த பகுதியை பயன்படுத்தினால், அது மேலும் மோசமடையும். அதேபோல், காயம்பட்ட கையில் அழுத்தம் கொடுப்பது காயத்தை மோசமாக்கி, இயல்பான இயக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.