Dhanush: மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து பட பூஜை..!
Dhanush D56 Movie Pooja: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான நாயகனகாக இருந்துவருபவர் தனுஷ். இவர் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் பணியாற்றிவரும் நிலையில், தற்போது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் D56 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இவரின் நடிப்பில் புதிதாக தமிழில் உருவாகிவரும் படம்தான் ஓம் (Om). இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாம். இந்த படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற பல்வேறு பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு பின் தனுஷ், லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் D56 படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
தற்போது அது உறுதியாகியுள்ளது. இன்று (25/09/2026) மதுரை, மாரநாடு கருப்பசாமியின் கோவிலில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த படத்தின் நடிகர்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ்.. டோரதி படத்தை பாராட்டிய தனுஷ்!
தனுஷின் D56 திரைப்படத்தின் பூஜை:
தனுஷ் இறுதியாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்திருந்த நிலையில், இதன் ஷூட்டிங் முடிந்தது என கூறப்படுகிறது. இதன் பிறகு தற்போது தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் D56 என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (25/09/2026) தொடங்கியுள்ளது. மதுரை, சிவகங்கை மாரநாடு கருப்பசாமி கோவிலில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: பார்க்கிங் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்.. வெளியானது SK27 பட அறிவிப்பு போஸ்டர்!
இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் இதில் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிக்கிறார்களாம். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தனுஷின் D56 படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#Dhanush’s next film #D56 is currently having its grand pooja ceremony. 🎬🔥
Casting – Dhanush – #PreityMukundhan – #SJSuryah – Vadivelu – VijayKumar
A Tamilarasan Pachamuthu Padaiyal pic.twitter.com/GOIZxE7pgz
— Movie Tamil (@_MovieTamil) September 25, 2026
இந்த D56 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். மேலும் இப்படத்திற்கு படையல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது மதுரையை மையமாக கொண்ட ஒரு பிரம்மாண்டமான கிராமத்து ஆக்ஷன் படமாக உருவாக்குவதாக கூறப்படுகிறது.