AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Baththa: 80ஸ் கேங்ஸ்டராக விஜய் சேதுபதி.. வெளியானது பத்தா படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர்!!

Baththa Movie Trailer: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்பட்டுவருபவர் விஜய் சேதுபதி. இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் பத்தா. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று (24/09/2026) அதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Baththa: 80ஸ் கேங்ஸ்டராக விஜய் சேதுபதி.. வெளியானது பத்தா படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர்!!
பத்தா படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Sep 2026 20:23 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் பணியாற்றிவருகிறார். இந்த வரிசையில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கில் ஸ்லம்டாக் (Slum Dog) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் நுழைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. அந்த விதத்தில் இந்த படத்திற்கு முன்பே விஜய் சேதுபதி நடித்துவந்த திரைப்படம்தான் பத்தா (Baththa). இதை இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) இயக்கியிருந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீ (Atlee) தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose) நடித்துள்ளார். படமானது 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் அதிரடியான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று (24/09/2026) இப்படத்தின் ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?

விஜய் சேதுபதி – லிஜோமோல் ஜோஸின் பத்தா படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட பதிவு:

பத்தா படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த படத்தின் ட்ரெய்லரில் விஜய் சேதுபதி ஒரு 80ஸ் காலகட்டத்தின் கேங்ஸ்டராக காட்டப்படுகிறார். அவரின் மனைவியாக லிஜோமோல் ஜோஸ் மற்றும் இரு பிள்ளைகள் இருப்பதுபோல கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி எவ்வாறாக ரவுடியாக மாறுகிறார் என்பது குறித்த கதையில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

பத்தா திரைப்படத்தின் கதை எதை பற்றியது:

இப்படத்தின் கதையானது 1986 மெட்ராஸ்:8 வயது சிறுவன் ஒருவன், தற்செயலாக ஒரு ரவுடியைப் பள்ளிக் கழிப்பறைக்குள் சிக்க வைக்கிறான். அந்த ரவுடி பசி, தனிமை மற்றும் தனது சொந்த பலவீனத்தை எதிர்கொள்ளும்போது, ​​அவர்களுக்கு இடையே எதிர்பாராத ஒரு பிணைப்பு உருவாகி, அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றிவிடுகிறது என்பதை போலவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us