இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்… இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ வீடியோ
JAILER 2 - Second Single Promo | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோவின் புரோமோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து உருவாகி வருகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக கூலி படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர்களின் கூட்டணியில் முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமே தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியும் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் எலமெண்ட் உடன் முடித்து வைத்தார் இயக்குநர் நெல்சன். இதன் காரணமாகவே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது.
இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் இன்றி புதுப் புது நடிகர்களும் இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ:
இந்த நிலையில் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் இருந்து முன்னதாக முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ நாளை 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அது தொடர்பான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாபா முத்திரை – வைரலாகும் செய்தி
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wakeup Rajination! ⭐#Jailer2 Second Single #OneSunOneMoon releasing from September 25 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @soupersubu @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh… pic.twitter.com/dz7AORkRQ1
— Sun Pictures (@sunpictures) September 23, 2026
Also Read… விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் லிரிக்கள் வீடியோ!