AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் லிரிக்கள் வீடியோ!

Ooroda Oththa Don Song Lyric Video From Baththa Movie | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தில் இருந்து நேற்று வெளியான ஊரோட ஒத்த டான் பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் லிரிக்கள் வீடியோ!
ஊரோட ஒத்த டான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2026 13:00 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நாயகனாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் அவ்வபோது உச்ச நடிகர்களின் படங்களுக்கு வில்லன் வேடத்தை ஏற்றும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் காந்தி டாக்ஸ் என்ற மௌனப் படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பத்தா பட ஊரோட ஒத்த டான் பாடல் லிரிக்கள் வீடியோ வைரலாகி வருகின்றது:

இந்த பத்தா படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது பத்தா படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளான ஊரோட ஒத்த டான் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிறை பட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப்பின் ராவடி பட ரிலீஸ் எப்போது?

பத்தா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கேப்டன் மில்லர் படத்திற்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ

Follow Us