ராஜூ ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகும் ஆல்மோஸ்ட் நல்லவன் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
Almost Nallavan movie second schedule begins | தமிழ் சினிமாவில் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ராஜு ஜெயமோகன். இவர் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகும் ஆல்மோஸ்ட் நல்லவன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் போதே தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் ராஜு ஜெயமோகன் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதில் மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டும் இன்றி அவர் அந்த சீசனில் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகராக தமிழ் சினிமாவில் பிசியாக இருந்து வந்த ராஜூ ஜெயமோகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பன் பட்டர் ஜாம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது ஆல்மோஸ்ட் நல்லவன் படக்குழு:
மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த ராஜூ ஜெயமோகன் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். அதன்படி இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்திற்கு ஆல்மோஸ்ட் நல்லவன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜூ ஜெயமோகன் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், துஷாரா விஜயன், இம்மான் அண்ணாச்சி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Also Read… 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எப்போது? முழுமையான விவரம் இதோ
ஆல்மோஸ்ட் நல்லவன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#AlmostNallavan Second Schedule begins in Tenkasi ⛰️🔥
Directed by @rajuactor91 🎬
Produced by @Sudhans2017 & #HVinoth #Sathyaraj@officialdushara @TSPrasanna_off
@foxnmuisc #Govindraj@bala_jayap66903@viyaki_s @PassionStudios_@aspireubuntu @thinkmusicindia@SureshChandraa… pic.twitter.com/0lozBP0ooM— Passion Studios (@PassionStudios_) September 21, 2026
Also Read… Ajith Kumar: வெற்றி வெற்றி வெற்றி… பார்சிலோனா கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!