AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பல உண்மை கதைகளை மையமாக கொண்ட கதை.. மீசையமுறுக்கு 2 படம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி!

Hiphop Adhi About Meesaya Murukku 2: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் புது மீசையமுறுக்கு 2. இந்த படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து ஹிப்ஹாப் ஆதி பேசியுள்ளார்.

பல உண்மை கதைகளை மையமாக கொண்ட கதை.. மீசையமுறுக்கு 2 படம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி!
மீசைய முறுக்கு 2 பற்றி ஹிப்ஹாப் ஆதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Sep 2026 17:02 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் ஆல்பம் பாடல்களும் மூலம் பாடகராக மற்றும் இசையமைப்பாளாராக பிரபலமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி (Hiphop Tamizha Adhi ). இவர் கடந்த 2010 ஆண்டு தொடக்கத்தில் தனது ஆல்பம் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வாடிப் புள்ள வாடி, கிளப்புல மப்புல போன்ற ஆல்பம் பாடல்களின் மூலம் நெருக்கமானார். இந்த பிரபலத்திற்கு பிறகு, இவர் சினிமாவிலும் இசையமைப்பாளராக நுழைந்தார். இயக்குநர் சுந்தர் சி-யின் இயக்கத்தில் வெளியான ஆம்பள (Aambala) என்ற படத்தின் மூலமாக இசையமைப்பளாராக அறிமுகமானார். இதில் விஷால் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு பின் சுந்தர் சி தயாரிப்பில், வெளியான மீசையமுறுக்கு (Meesaya Murukku) படத்தின் மூலம் ஹீரோவாக மற்றும் இயக்குநராகவும் அறிமுகமானார். இப்படம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் நடிப்பில் 20276ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் புது படம்தான் மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku). இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதி, இப்படத்தின் கதைக்களம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஸில் இந்த வாரத்தில் வெளியேறும் நபர் யார்? வெளியான புரோமோ!

மீசையமுறுக்கு 2 படத்தின் கதைக்களம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, “இப்படமானது பல உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. இது முக்கியமாக கானா பாடலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். கானா இசையின் வரலாறை பேசக்கூடிய படம். அதன் வரலாற்றுப் பயணத்தைக் கண்டறிந்து, இன்றைய உலகில் அதன் பொருத்தப்பாட்டையும் ஆராய்கிறது.

இதையும் படிங்க: தனுஷின் 56-வது படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்? வைரலாகும் தகவல்

இக்கதையின் பெரும்பகுதி எனது சொந்த அனுபவங்களிலிருந்து எடுக்கப்பட்டது. மீசைய முறுக்கு பாகம் 1 பெரிய கனவுகளைக் கண்டு, அவற்றை நனவாக்குவதைப் பற்றியதாக இருந்த நிலையில், இந்தக் கனவை அடைந்த பிறகு, அதைத் தக்கவைத்துக் கொள்வதில் உள்ள போராட்டங்கள், சவால்கள் மற்றும் யதார்த்தங்கள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் ஆராய்கிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மீசையமுறுக்கு 2 படத்தின் ட்ரெய்லர் குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட பதிவு:

இந்த படத்தையும் சுந்தர் சி தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என மூன்று பணிகளையும் செய்த்துள்ளார். மேலும் இப்படத்தில் அவர் மூன்று வேடத்தில் நடிக்க, அந்த மூன்று வேடத்திற்கும் 3 நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us