AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rashmika Manndana: ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா.. மைசா பட ப்ரீ டீசரை வெளியிட்ட படக்குழு!

Myssa Movie Pre-Teaser: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் லீட் நாயகியாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ள முதல் திரைப்படம்தான் மைசா. நாளை (20/09/2026) இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரீ டீசரை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Rashmika Manndana: ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா.. மைசா பட ப்ரீ டீசரை வெளியிட்ட படக்குழு!
மைசா திரைப்பட ப்ரீ டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Sep 2026 21:58 PM IST

டோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திவரும் நாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Manndana). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் காக்டெல் 2 (Cocktail 2). இந்தி மொழியில் வெளியான இந்த திரைப்படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படமானது கடந்த ஜூலை இறுதியில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் ராஷ்மிகாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாக தயாராகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் மைசா (Myssa). இந்த படத்தை இயக்குநர் ரவீந்திர புள்ளே (Rawindra pulle) இயக்க, அன்பார்முலா பிலிம்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடிக்க, அவருடன் தெலுங்கு சினிமா பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் நாளை 2026ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு தற்போது இதன் ப்ரீ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சில நொடிகளுக்குள்ள முடிவெடுப்பதுதான் முக்கியம்.. வெளியானது அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்!

ராஷ்மிகா மந்தனாவின் மைசா திரைப்பதத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படமானது அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஷ்மிகா அதிகமாக ஆக்ஷன் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடன காட்சியில் ராஷ்மிகா நடித்துவந்தபோது, தனது கால் தசைக் கிழிவு காரணமாக கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். தற்போது இவரின் உடல்நலம் தேறிவரும் நிலையில், ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: என்னால் நம்பமுடியால.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா.. உறுதி செய்த விஜய் சேதுபதி!

ராஷ்மிகாவின் மைசா படத்தின் ரிலீஸ் எப்போது:

இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கிட்டதட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் எல்லாம் மாஸாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 10 சதவீதம் இருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us