Vijay Sethupathi: என்னால் நம்பமுடியால.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா.. உறுதி செய்த விஜய் சேதுபதி!
Vijay Sethupathi About Maharaja Movie: தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் பத்தா படமானது வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசிய விஜய் சேதுபதி, மகாராஜா படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதை உருகி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupati). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் 2026ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் முதல் திரைப்படம்தான் பத்தா (Baththa). இந்த திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) இயக்க, இயக்குநரும், தயரிப்பாளருமான அட்லீ குமார் (Atlee Kumar) தயாரித்துள்ளார். இந்த படமானது 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படமானது சிறப்பாக மற்றும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அதை முன்னிட்டு சமீபத்தில் இதன் இசைவெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. அப்போது மேடையில் பேசிய விஜய் சேதுபதி, அவர் நடித்த மகாராஜா (maharaja) படமானது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளார்.




இதையும் படிங்க: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!
பத்தா திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Experience the power-packed #WorldOfBaththa now 🔥
Written & Directed by #BalajiTharaneetharan
A @SaiAbhyankkar musical#BaththaFromOct1@jose_lijomol @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl #ShruthiManjari @gopiprasannaa@Atlee_dir…— VijaySethupathi (@VijaySethuOffl) September 16, 2026
மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதை உறுதி செய்த விஜய் சேதுபதி:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய விஜய் சேதுபதி, “சமீபத்தில் நிதிலன் என்னிடம் மகாராஜா 2-ன் கதையைச் சொன்னார்.. அது அழகாக இருந்தது.. அவர் ஒரு சிறந்த இயக்குனர். படம் வெளியாவதற்கு முன்பு சிலர் மகாராஜாவை நம்பவில்லை, ஆனால் நான் அதை நம்பினேன்.. தயாரிப்பாளர் சமீபத்தில் என்னை அழைத்து, படத்தை ஹாலிவுட்டுக்கு விற்றுவிட்டதாகக் கூறினார்.
இதையும் படிங்க: பிக்பாஸிலிருந்து போட்டியாளர்களால் எவிக் செய்யப்பட்டது யார்?
யார் நடிக்கப் போகிறார்கள் என்று நான் கேட்டபோது..? அதில் மேத்யூ மெக்கனாஹி நடிக்கப் போகிறார் என்று அவர் கூறினார். நான் அவரிடம், “நான் ஒரு படத்தில் இலவசமாக நடிக்கிறேன்.. அந்தப் படத்தில் எனக்கு ஒரு வேடம் வாங்கிக் கொடுங்கள். நான் அங்கே செல்கிறேன்” என்று சொன்னேன். எனக்கு ஹாலிவுட்டில் நடிக்க ஆசை உண்டு, ஆனால் என் படம் அங்கு சென்றதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.