AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திலீப்பாக சுராஜ் – வெளியான ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 பட்டாசு புரோமோ

Jailer 2 New Promo : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர்  சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள திலீப் கதாப்பாத்திரத்தின் அறிமுகப்படுத்தும் விதமாக புரோமோ வெளியாகியுள்ளது.

திலீப்பாக சுராஜ்  – வெளியான ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 பட்டாசு புரோமோ
ரஜினிகாந்த் - சுராஜ் வெஞ்சரமூடு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Sep 2026 19:09 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர்  சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள திலீப் கதாப்பாத்திரத்தின் அறிமுகப்படுத்தும் விதமாக புரோமோ வெளியாகியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் மலையாள நடிதர் விநாயகன் வில்லனாக கலக்கிய நிலையில் ஜெயிலர் 2வில் சுராஜின் கதாப்பாத்திரமும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ஒட்டுமொத்தமாக ரூ.600 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 15, 2026 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான அல பொலேலோ வெளியாகி கவனம் ஈர்த்தது.

இதையும் படிக்க : ஆனந்தியின் பேச்சு மோதலாகுமா..? லட்சுமி பிரியா – ஆனந்தியின் மத்தியில் வலுக்கும் மோதல்!!

ஜெயிலர் 2 புரோமோ

 

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ‘அல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகியுள்ளது. ஆனால் இந்த பாடல் முதல் பாகத்தில் தமன்னா நடனமாடிய காவாலைய்யா பாடல் போன்று இல்லை என ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : Vettuvam: மக்களுக்கான தலைவனை தேந்தெடுக்கும் போட்டி.. வெளியானது ‘வேர்ல்ட் ஆப் வேட்டுவம்’ கிளிம்ப்ஸ்!

அதே போல ஜெயிலர் முதல் பாகத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டியிருந்தார். மலையாளம் கலந்த அவரது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் மற்றொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள திலீப் கதாப்பாத்திரத்தின் புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Follow Us