ரூ 300 கோடி வசூல் சாதனையில் பெத்தலகேம் குடும்ப யூனிட் படம்.. நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த நிவின் பாலி!
Bethlehem Kudumba Unit Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் மலையாளத்தில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் பெத்தலகேம் குடும்ப யூனிட். இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், இதன் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.
மலையாள சினிமாவில் இந்த 2026ம் ஆண்டின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் பெத்தலகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). பிரேமலு (Premalu) பட இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish AD) இயக்க, ஃபகத் ஃபாசில் இணைந்து தயாரித்திருந்தார். இதில் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி (Nivin pauly) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நாயகியாக நடித்திருந்தார். சிறப்பான காதல் மற்றும் சிறப்பான பீல் குட் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மொத்தமாக 3 மொழிகளில் வெளியாகியிருந்தது.
இப்படம் வெளியாகி இத்துடன் மொத்தம் 1 மாதமான நிலையில், இதுவரைக்கும் மொத்தமாக எவ்வளவு கோடிகளை வசூல் செய்துள்ளது என படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது விரைவில் ஓடிடியிலும் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த அறிவிப்பை நிவின் பாலி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: சூரி எப்டி எப்டி.. மண்டாடி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து பகிர்ந்த சூரி!
பெத்தலகேம் குடும்ப யூனிட் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து நிவின் பாளி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
300+ Crores Worldwide Gross!
Thank you for the endless love! ❤️The frame would have been truly complete with our music magician Vishnu Vijay in it. Sending you all the love! 💕@_mamithabaiju @BhavanaStudios @BhavanaRelease @PharsFilm @FutureRunup @MythriRelease @PicturesPVR… pic.twitter.com/St9lEjQoJl
— Nivin Pauly (@NivinOfficial) September 18, 2026
பெத்தலகேம் குடும்ப யூனிட் பட ஓடிடி ரிலீஸ்:
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் முதல் முறையாக உருவாகியிருந்த திரைப்படம்தான் பெத்தலகேம் குடும்ப யூனிட். இந்த படமானது பீல் குட் காதல் மற்றும் இசை மீட்டது ஆர்வமுள்ளள ஒரு சிறப்பான கதையில் உருவாக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை போலவும், இப்படத்திலும் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இருவருக்கும் இடையே வயது வித்தியாச காதல் கதையில் இருந்தது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு சட்ட சிக்கல்? வைரலாகும் தகவல்
இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஒருமாதமான நிலையில், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாம். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.