AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துருவ் விக்ரமின் ஜாக்கி.. ‘First Move’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

Jackie First Move Release Date: கோலிவுட் சினிமாவில் இளம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் துருவ் விக்ரம். இவர் அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் ஜாக்கி. இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

துருவ் விக்ரமின் ஜாக்கி.. ‘First Move’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
துருவ் விக்ரமின் ஜாக்கி.Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Sep 2026 17:32 PM IST

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மூத்த மகன் துருவ் விக்ரம் (Dhruv Vikram) தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து கலக்கிவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 4-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் இது வெளியான நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஜாக்கி (JACKIE). இப்படம் ஆரம்பத்தில் DV04 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் (Karan Aravind Kumar) இயக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துவருகிறார். இவர்கள் கூட்டணியில் இப்படமானது மிகவும் சிறப்பாக அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீன் படத்தில் நஸ்லேனின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யாவின் அடுத்த ப்ளான் என்ன?

துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தின் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் அப்டேட்:

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் துருவ் விக்ரம் நடிக்க, நடிகை யார் என இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆதித்ய வர்மா பட எழுத்தாளர் கரண் அரவிந்த் குமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுவருகிறதாம்.

இதையும் படிங்க: நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ராஷ்மிகா பற்றி பேசிய கமல்ஹாசன்!

அந்த விதத்தில் இப்படத்தின் First Move வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் மாலை 04:05 நேரத்தில் வெளியாகிறதாம். இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

துருவ் விக்ரமின் ஜாக்கி திரைப்படத்தின் First Move ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

துருவ் விக்ரம் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடிக்கிறாராம். இப்படமும் ஆதித்ய வர்மா படத்தை போல ஆக்ஷன், காதல் மற்றும் ரொமாண்டிக் போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us