AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhruv Vikram: எனது அடுத்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா கிடையாது.. இப்படிதான் இருக்கும் – துருவ் விக்ரம்!

Dhruv Vikram New Movie: இளம் நாயகனாக சினிமாவில் கலக்கிவருபவர் துருவ் விக்ரம். இவர் இறுதியாக பைசன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இதையடுத்து எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் என கேள்விகள் எழுந்தது. இந்நிலையில், தான் நடிக்கும் புதிய படம் குறித்து துருவ் விக்ரம் அப்டேட் கொடுத்துள்ளார்.

Dhruv Vikram: எனது அடுத்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா கிடையாது.. இப்படிதான் இருக்கும் – துருவ் விக்ரம்!
துருவ் விக்ரம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Jun 2026 12:30 PM IST

நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) தமிழில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். ஆதித்ய வர்மா (Adithya Varma) என்ற ரீமேக் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், இதை தொடர்நது மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படங்களின் வரிசையில் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்த திரைப்படம் பைசன் (Bison). இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் வெளியான இப்படம் முழுக்க முழுக்க சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த இப்படம், 2025ம் ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு ரீமேக் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார் என பேசப்பட்டுவந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துருவ் விக்ரம், தனது புதிய திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள பேட்ரியாட் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

தனது புதிய திரைப்படம் குறித்து பேசிய துருவ் விக்ரம் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய துருவ் விக்ரம், “எனது அடுத்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா கிடையாது. அந்த படம் குறித்து நிறைய சொல்ல விரும்பவில்லை. அந்த படத்தின் புரோமோ அடுத்த மாதத்தில் (ஜூலை) வருகிறது. ஒரு நல்ல டீம், ஒரு நல்ல இயக்குனர் மற்றும் நல்ல தயாரிப்பாளார்கள் அமைந்துள்ளார்கள். அதற்கான முயற்சியாகவே புது படத்திற்கு தயாராகிவருகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகன் பிறந்த நாள்… சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்

புதிய திரைப்படத்தை பற்றி துருவ் விக்ரம் பேசியது தொடர்ப்பன வீடியோ பதிவு:

நடிகர் துருவ் விக்ரம் தற்போது ஆக்ஷன் கதைக்களத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம் சிறப்பான ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த படத்தை யார் இயக்குகிறார்?, எந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது என தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் துருவ் விக்ரமின் 4வது திரைப்படமாக தயாராகுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது துருவ் விக்ரம் பேசியது தொடர்பான வீடியோ அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us