AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகன் பிறந்த நாள்… சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan served a briyani feast for Seyon movie team | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் சேயோன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகன் பிறந்த நாள்… சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 21:07 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே தனி வரவேற்பு கிடைப்பது மட்டும் இன்றி டி.ஆர்.பியிலும் முன்னிலை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்த சிவகார்த்திகேயன் பிறகு வெள்ளித்திரைக்கு வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தனது தாய்மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளன். அதில் முதல் மகளுக்கு ஆராதனா சிவகார்த்திகேயன் இரண்டவது மகன் குகன் சிவகார்த்திகேயன் மூன்றாவது மகன் பவன் சிவகார்த்திகேயன் ஆவர். மூன்று குழந்தைகளுடன் தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்:

தொடர்ந்து சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் பிரமாண்டமாக எடுத்து முடித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது இளைய மகன் பவனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த சேயோன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பேட்ரியாட் முதல் துரந்தர் 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Nivin Pauly: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லகேம் குடும்பா யூனிட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Follow Us