AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேட்ரியாட் முதல் துரந்தர் 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

This Week OTT Release Update | தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் முக்கிய நடிகர்கள் பலரின் படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அந்தப் படங்கள் என்னென்ன அதனை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேட்ரியாட் முதல் துரந்தர் 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2026 20:50 PM IST

பேட்ரியாட் படம்: மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்து இருந்த படம் பேட்ரியாட். இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து இருந்ததால் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன், ஜுவான் ஜான்ஸ் மற்றும் பிரகாசித்த சைமன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

29 படம்: இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 08-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 29. இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கேடி தி டெவில் படம்: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துருவ சார்ஜா. இவரது நடிப்பில் கன்னட சினிமாவில் கடந்த 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கேடி தி டெவில். இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி கேடி தி டெவில் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… திடீரென இன்ஸ்டாவிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. யார் தெரியுமா?

துரந்தர் 2 தி ரிவெஞ்ச்: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் துரந்தர் 2 தி ரிவெஞ்ச். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Karuppu: கருப்பனின் ஆட்டம்.. தமிழகத்தில் மட்டும் 21வது நாளின் முடிவில் கருப்பு படத்தின் வசூல் இத்தனை கோடியா?

Follow Us