திடீரென இன்ஸ்டாவிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. யார் தெரியுமா?
Pandian Stores Serial Actress: சமீபகாலமாக பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் சமூக ஊடகங்களிலிருந்து விலகிவருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த பிரபல நடிகையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அது யார் என பார்க்கலாம்.
தற்போது மக்கள் மத்தியில் சமூக ஊடங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவருகிறது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும், பல தீமைகளும் இருக்கிறது. சமீபகாலமாக நடிகைகளின் புகைப்படங்களை ஏஐ மூலமாக தவறாக சித்தரிப்பது, தேவையில்லாத ஜூம்களில் புகைப்படங்களை பகிர்வது தொடர்பான விஷயங்கள் நடக்கிறது. இதற்கு எதிராக பல நடிகைகள் குரல் கொடுத்தாலும், இந்த செயலானது குறைவதுபோல இல்லை. இதனால் பல நடிகைகள் சமூக ஊடங்களை பயன்படுத்துவதையே விட்டுவிட்டனர். இந்நிலையில் தற்போது விஜய் டிவி சீரியல் நடிகை (Vijay TV Serial Actress) ஒருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து (Instagram Page) சிறிதுகாலம் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைதான் யார் தெரியுமா? (Pandian Stores Serial Actress).
பாண்டியன் ஸ்டார் சீசன் 1 சீரியலில் வி.ஜே.சித்ரா மற்றும் காவ்யா அறிவுமணி நடித்திருந்த முல்லை என்ற வேடத்தில் நடித்த நடிகை லாவண்யாதான் (Lavanya). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் சிறிதுகாலம் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து விலகவுள்ளதாகவும், இது குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.




இதையும் படிங்க: திரிஷா குறித்துவரும் சர்ச்சை.. அவர் எப்போதும் அப்படிதான் – அர்ச்சனா கல்பாத்தி பேச்சு!
இன்ஸ்டாகிராமிலிருந்து விலகுவது குறித்து நடிகை லாவண்யா வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை லாவண்யா, “நான் இன்ஸ்டாகிராமில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். இந்தக் காலகட்டத்தில், பணி தொடர்பான அனைத்து விசாரணைகள், கூட்டுப்பணிகள் மற்றும் வணிகத் தகவல்தொடர்புகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். உங்கள் ஆதரவிற்கும் புரிதலுக்கும் நன்றி” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தகவலானது அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!
சீரியல் நடிகை லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை லாவண்யா தமிழில் பாண்டியன் ஸ்டார் சீசன் 1 சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு முன் அந்த வேடத்தில் வி.ஜே.சித்ரா மற்றும் காவ்யா அறிவுமணி போன்ற நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் முடிவிற்கு பிறகு அவ வேறு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படங்களில் சிறுசிறு வேதங்கள் மற்றும் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.