AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் 55-வது படத்தின் லுக் இதுதானா? வைரலாகும் வீடியோ

Actor Dhanush New Look Viral On Social Media | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் தோற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

தனுஷின் 55-வது படத்தின் லுக் இதுதானா? வைரலாகும் வீடியோ
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 17:34 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை படங்களில் நடித்து தமிழ் சினிமாவை பெருமைப் படுத்தி உள்ளார் நடிகர் தனுஷ். தந்தையின் உதவியால் சினிமாவில் நுழைந்து இருந்தாலும் தற்போது உள்ள இடத்தை அடைவதற்காக தனது கடின உழைப்பை செலுத்தி உள்ளார் நடிகர் தனுஷ். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமில் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கர.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அதன்படி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தினை தற்போது டி 55 என்று அழைத்து வருகின்றது.

தனுஷின் 55-வது படத்தின் லுக் இதுதானா?

இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். படத்தில் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர் மம்முட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மம்முட்டி சமீபத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் தனுஷின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தனுஷ் சமீபத்தில் மும்பை விமான நிலையம் சென்ற நிலையில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் ஃபங்க் ஸ்டைல் வைத்திருந்த நிலையில் இதுதான் தனுஷ் 55 படத்தின் லுக் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… 10 ஆண்டுகளைக் கடந்தது இறைவி படம் – நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

இணையத்தில் வைரலாகும் தனுஷின் வீடியோ:

Also Read… ராம் சரணின் கெரியர் பெஸ்டாக அமைந்ததா பெத்தி படம்? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ

Follow Us