D 55 படத்தில் தனது போர்ஷனை முடித்த மம்முட்டி – வைரலாகும் தகவல்
Actor Mammootty Completes D 55 Movie | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அவ்வபோது தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தனுஷின் 55-வது படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது காட்சிகள் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடந்து மலையாள சினிமவில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளார் நடிகர் மம்முட்டி. இவர் தமிழ் சினிமாவில் நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வந்தார். மேலும் நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடித்து வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து உள்ளார் நடிகர் மம்முட்டி.




D 55 படத்தில் தனது போர்ஷனை முடித்த மம்முட்டி:
இந்த நிலையில் நடிகர் தனுஷின் 55-வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் நடிகர் மம்முட்டி. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கிறார் என்று தகவல் வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி தனது போர்ஷனை நடித்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… தொடங்கியது அபிஷன் – சிவராஜ்குமார் பட ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
– #Mammootty has completed filming his portions for #D55, starring #Dhanush. The makers are currently planning to release the film in October.
The film is being directed by #RajkumarPeriyasamy and also features Mammootty in a pivotal role. pic.twitter.com/YEQCAf9bSs
— Movie Tamil (@_MovieTamil) June 3, 2026