AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் – வைரலாகும் பதிவு!

MG University conferred an honorary doctorate for Mammootty | மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகர் மம்முட்டிக்கு மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் இணைந்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து உள்ளது.

மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் – வைரலாகும் பதிவு!
மம்முட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 May 2026 16:20 PM IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் நடிகராக சினிமாவில் 50 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். தொடர்ந்து மலையாள ச் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பான் இந்திய மொழிகளிலும் நாயகனாக நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் 50 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகர் மம்முட்டி 75 வயதைக் கடந்தும் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டி தற்போது மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் இறுதியாக வெளியான பாட்ரியாட் என்ற படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 55-வது படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான தகவல்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

கௌரவ டாக்டர் பட்டத்திற்கு நன்றி கூறிய மம்முட்டி:

சினிமாவில் நடிகர் மம்முட்டிய ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவப் படுத்தும் விதமாக கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நடிகர் மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது தொடர்பாக மம்முட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, இன்று மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திடமிருந்து, கேரள மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட கௌரவ D.Litt. பட்டத்தைப் பெற்றதில் நான் பெரிதும் நெகிழ்ந்துபோனேன். இந்த மறக்கமுடியாத பயணத்தின் நெடுகிலும் என் பக்கபலமாகத் துணை நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… AR Murugadoss: முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாளத்தில் உருவான பாலன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Follow Us