AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன்றே கணித்தார் வெங்கட் பிரபு… இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Premgi's X post regarding Tamil Nadu politics | தமிழ் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் என்ன இருக்கு என்று தற்போது பார்க்கலாம்.

அன்றே கணித்தார் வெங்கட் பிரபு… இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
கோட் பட காட்சிகள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 17:29 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் இயக்குநராகவே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழ் சினிமாவில் சென்னை 600 028 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன வெங்கட் பிரபு தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானார். இயக்குநர் வெங்கட் பிரபு படம் என்றாலே அது நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவிற்கு படம் மிகவும் ஜாலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் வெங்கட் பிரபு இறுதியாக தளபதி தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜயை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சிறப்பு நடனம் ஆடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் படத்தில் தற்போதைய அரசியல் சூழலை காட்டும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. அதனை குறிப்பிட்டு நடிகரும் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம் ஜி ஒரு பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

அந்தப் பதிவில் கோட் படத்தில் வெளியான விசில் போடு என்ற பாடல் மூலம் தளபதி விஜயின் கட்சி சின்னமான விசிலை குறிப்பிட்டுள்ளது குறித்து தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் தளபதி விஜய் பயன்படுத்திய காரின் நம்பர் ப்ளேட்டில் TN 07 CM 2026 என்று குறிப்பிட்டது போல 2026-ம் ஆண்டில் தளபதி விஜய் முதலமைச்சராக தமிழ்நாட்டில் பதவி ஏற்றுள்ளார். மேலும் இந்த கோட் படத்தில் போக்குவரத்து காவலராக நடித்தவர்தான் தற்போது தமிழ் நாட்டில் போக்குவரத்து துரை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இது அனைத்தையும் குறிப்பிட்டு பிரேம் ஜி வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சில நேரங்களில் அன்பு என்பது இவ்வளவு மட்டுமே… விஜய் ஆண்டனியின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்

நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Also Read… அந்த நேரத்தில் சிவா ரொம்பவே கஷ்டப்பட்டாரு.. இப்போது அவரை நினைத்தால் பெருமையாக இருக்கு – சந்தோஷ் நாராயணன்!

Follow Us