AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vanitha Vijaykumar: குக் வித் கோமாளியில் நான் இருக்கவேண்டிய இடம்.. ரோஜாவுக்கு நடுவராக இருக்க என்ன தகுதி இருக்கு? – வனிதா பரபரப்பு பேச்சு!

Vanitha Blasts Rojas CWC S7 Judging: விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது குக் வித் கோமாளி. இந்த 2026ம் ஆண்டிற்காக குக் வித் கோமாளி சீசன் 7 நடைபெற்றுவரும் நிலையில், இதில் பெண் நடுவராக நடிகை ரோஜா இருக்கிறார். இந்நிலையில் அவரின் நடுவர் பதவி குறித்து, நடிகை வனிதா ஆதங்கமாக பேசியுள்ளார்.

Vanitha Vijaykumar: குக் வித் கோமாளியில் நான் இருக்கவேண்டிய இடம்.. ரோஜாவுக்கு நடுவராக இருக்க என்ன தகுதி இருக்கு? – வனிதா பரபரப்பு பேச்சு!
ரோஜா மற்றும் வனிதா விஜயகுமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 May 2026 19:02 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகையாகவும், சின்னத்திரையில் போட்டியாளராகவும் இருந்துவந்தவர் வனிதா விஜயகுமார் (Vanitha vijaykumar) . இவர் கடந்த 2019ம் ஆண்டில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) போட்டியில், போட்டியாளராக பங்கேற்றிருந்தனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் வாத்திக்குச்சி வனிதா என அனைவராலும் அழைக்கப்பட்டுவந்தார். பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ந(Vijay TV) டைபெற்றிருந்த குக் வித் கோமாளி சீசன் 1 (Cook With Comali 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதில் வனிதாதான் வெற்றிபெற்றிருந்தார். இதையடுத்து சினிமாவில் சிறுசிறு வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடைத்துவந்தார்.

மேலும் சமீபத்தில் இவர் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த வனிதா விஜயகுமார், குக் வித் கோமாளி சீசன் 7ன் (Cook With Comali 7) நடுவராக இருந்துவரும் நடிகை ரோஜாவை (Actress Roja) விமர்சித்துள்ளார். அதில் அவர் ரோஜாவுக்கு எவ்வாறு நடுவராக இருக்க தகுதி இருக்கிறது? என விமர்சித்துள்ளார். இது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: வாடிவாசல் படம் சூர்யாவின் கெரியரில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும்.. ஆனால் – மிஷ்கின் பேச்சு!

நடிகை ரோஜா குறித்து வனிதா விஜயகுமார் விமர்சித்த விஷயம்:

அந்த நேர்காணலில் பேசியிருந்த வனிதா விஜயகுமார், குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருந்தது குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், “அந்த நிகழ்ச்சியில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன். என்ன ஃபார்மேட், அதில் என்ன நடக்கும், அங்குள்ள போட்டியாளர்கள் என்ன எதிர்கொள்வார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். அந்தவகையில் பார்த்தல், அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்வதற்கு தகுதி எனக்குதான் இருக்கிறது.

இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 தீவிர திகில் திரைப்படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!

இதுகுறித்து விஜய் டிவியில் தொடர்புகொண்டு ஒருவரிடம் கேட்டேன், ஆனால் அவர்கள் எங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை அக்கா, என்னை மன்னிச்சிடுங்கனு சொல்லிட்டாங்க. இப்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 7ல் முன்பு இருந்த சுவாரஸ்யங்கள் இல்லை. எப்போதும் இருக்கும் இயல்பான நகைச்சுவை, கலகலப்பும் இல்லை” என அதில் அவர் ஓபனாக பேசியுள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை வனிதா விஜயகுமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)

நடிகை வனிதா ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர். இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து சினிமாவில் நடிப்பதற்கு பெரிதும் இவர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறலாம். அந்த வகையில் 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது அவருக்கு வரவேற்பை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us