AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நாளுக்கு இவ்வளவா?

Nirosha Salary For Pandian Stores 2: தமிழ் மக்கள் மத்தியில் புகப்பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருந்துவருவதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் சீசன் 2 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளுக்கு, நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு என விவரமாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நாளுக்கு இவ்வளவா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நிரோஷா சம்பளம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 May 2026 13:19 PM IST

விஜய் தொலைக்காட்சியானது (Vijay TV) தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த தொலைக்காட்சியில் டிஆர்பியில் (TRP) முதலில் இருக்கும் சீரியலாக மதுமிதா நடித்துவரும், அய்யனார் துணை சீரியல் (Ayyanar Thunai) உள்ளது. இந்த சீரியலுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 (Pandian Stores 2). இந்த சீரியலானது கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த சீரியலானது அண்ணன் தம்பி மற்றும் குடுமபத்திற்குள் நடக்கும் குளறுபடிகள் தொடர்பான கதையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. இந்த சீரியலில் நடிகைகள் ஸ்டாலின் முத்து, நிரோஷா (Nirosha), சரண்யா (Saranya), வெங்கட் ரங்கநாதன் மற்றும் ஹேமா ராஜ்குமார் (Hema Rajkumar) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள்.

இந்த சீரியலானது மக்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒருநாளைக்கு, நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் :

நடிகை நிரோஷா தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சினிமாவிலிருந்து தற்போது சின்னத்திரையில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

இதையும் படிங்க: பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் ஃபகத் பாசில் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி என்ற வேடத்தில் இவர் நடித்துவரும் நிலையில், இதில் நடிக்க எவ்வளவு சம்பளமாக பெறுகிறார் தெரியுமா?. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு தினத்திற்கு ரூ 10,000 முதல் 30,000 வரை சம்பளமாக பெருகிறாராம். இதை கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு, கிட்டத்தட்ட ரூ 3,00,000 லட்சத்திற்கும் குறையாமல் இவரின் சம்பளம் இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

நடிகை நிரோஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)

நடிகை நிரோஷா தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியான லாக்டவுன் என்ற படத்திலும் இவர் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us