அய்யனார் துணை சீரியல் ஷூட்டிங்கில் மதுமிதாவுக்கு ஏற்பட்ட சோகம்.. வைரலாகும் வீடியோ!
Madhumitha Hirannaiah: தமிழில், குறிப்பாக விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் சீரியலாக இருந்துவருவது அய்யனார் துணை. இந்த சீரியலில் நிலா சோழன் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் மதுமித்தார். இந்த சீரியல் ஷூட்டிங்கில் தனது கஷ்டம் குறித்து மதுமிதா வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) எப்போதுமே டிஆர்பியில் (TRP) முதலிடத்தை பிடித்துவரும் சீரியலில் ஒன்றாக இருப்பது அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியலானது அண்ணா, தம்பிகள் பாசப்போராட்டம் இந்த குடும்பத்திற்குள் தனி ஒரு பெண்ணாக நிலா படும் கஷ்டங்கள் குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் இந்த சீரியலானது தொடர்ந்து ஒளிபரப்பாகிவருகிறது. மேலும் இந்த சீரியல் ஒட்டுமொத்த தமிழ் சீரியல்களில் டாப் 5 இடங்களில் ஒரு இடத்தை பிடித்துவருகிறது. இந்த சீரியலில் நிலா சோழன் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் நடிகை மதுமிதா ஹிரன்னையா (Madhumitha Hirannaiah). இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில் நாயகியாக நடித்துவந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் (Sun TV) வெளியான எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இதன் பிறகே விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் தற்போது கோடைக்கால வெயில் கொளுத்திவரும் நிலையில், அய்யனார் துணை சீரியல் ஷூட்டிங்கில், தான் படும் கஷ்டம் குறித்து மதுமிதா ஹிரன்னையா வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!
அய்யனார் துணை சீரியல் மதுமிதா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
அந்த வீடியோவில் மதுமிதா ஹிரன்னையா, “கோடைக்கால வெயில் தானாக முடியவில்லை என்றும், சாப்பிடவில்லை என்றால் பசிக்கிறது, சாப்பிட்டால் தூக்கம்வருகிறது. இந்த கோடைக்கால வெயிலை எப்படி சமாளிப்பது ஐயோ” என அந்த வீடியோவில் கூறியுள்ளார். அந்த வகையில் தனது கஷ்டம் குறித்து நடிகை மதுமிதா சொன்ன விஷயம் தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்
நடிகை மதுமிதா பிரபல தெலுங்கு நடிகையாவார். இவர் தமிழில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது அய்யனார் துணை என்ற சீரியலில் நிலா சோழனாக நடித்துவருகிறார். இந்த் சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாகள் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 என்ற இடித்ததில் இருக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி வெறும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், விஜய் டிவியில் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.