AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘விசாரணை நடத்தட்டும்…’ – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பது தொடர்பான கேள்வி எழுப்பியபோது, ஒவ்வொரு ஆணையத்திற்கும் அதற்கென உரிய அதிகாரங்கள் உள்ளன. அவர்கள் விசாரணை நடத்தட்டும். அதன் பிறகே பதிலளிக்க முடியும் என்றார்.

‘விசாரணை நடத்தட்டும்…’ – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
Sekaran S
Sekaran S | Updated On: 15 Nov 2026 22:10 PM IST

 

கோயம்புத்தூர், நவம்பர் 15 : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து விளக்கம் கேட்டு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women) கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், கள்ளக்குறிச்சி விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பது தொடர்பான கேள்விக்கு, ஒவ்வொரு ஆணையத்திற்கும் அதற்கென உரிய அதிகாரங்கள் உள்ளன. அவர்கள் விசாரணை நடத்தட்டும். அதன் பிறகே பதிலளிக்க முடியும் என்றார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு எதிராக பிரதமர் சாட்டையைச் சுழற்றப் போகிறார் என்றும், அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையப் போகிறது என்றும் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, பிரதமர் இரண்டு முறை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும், தமிழக முதல்வரைச் சிறந்த முதல்வர் என்றும், நேர்மையான ஆட்சியை நடத்தி வருபவர் என்றும் பாராட்டியுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிக்க : மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் வாய்கிழியப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் இயக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இதுபோன்று விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார். எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மற்றொரு இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற பேச்சுகளுக்குப் பதிலளிப்பது தற்போதைய சூழலில் நாகரிகமாக இருக்காது என்றும், நாகரிகமற்ற முறையில் பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

மேலும், தமிழக அரசின் மீது யாரும் சாட்டையைச் சுழற்ற முடியாது என்றும், இந்த இயக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கம் என்றும் தெரிவித்தார். இரண்டு ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த இயக்கம் இது எனக் குறிப்பிட்ட அவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை விமர்சித்தார். சட்டமன்ற வரலாற்றில் என்ன நடைபெற்றது என்பது இதுபோன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றும், ஏதாவது விமர்சனம் செய்து பத்திரிகைகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே பேசுவதாகவும் கூறினார். தெளிவான சிந்தனையுடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பது தொடர்பான கேள்விக்கு, ஒவ்வொரு ஆணையத்திற்கும் அதற்கென உரிய அதிகாரங்கள் உள்ளன. அவர்கள் விசாரணை நடத்தட்டும். அதன் பிறகே பதிலளிக்க முடியும் என்றார். விசாரணை தொடங்கியவுடன் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிப் பதில் பெறுவது விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் கூறினார். குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், விசாரணையின் முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க.வினர் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து அவர்கள் பேசினால் பல்வேறு கருத்துகளைக் கூற முடியும் என்றார். அவர்களது ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

திமுக மீது அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்

அவர்களது ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது என்றும், கவுன்சிலர் ஒருவர் காவல் ஆய்வாளரைப் பின்னால் இருந்து தட்டிய சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் கூறினார். இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தங்களாலும் முன்வைக்க முடியும் என்ற அவர், தி.மு.க. ஆட்சியை மக்கள் ஏன் மாற்றினார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றார். சிறந்த ஆட்சியை வழங்கியிருந்தால் ஏன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். அதேபோல், சிறந்த ஆட்சியை வழங்குவதாகக் கூறும் அ.தி.மு.க. ஏன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது என்பதற்கும் பதிலளிக்க வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது குறித்த கேள்விக்கு, முதல்வர் அனைவருக்கும் வழங்க வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்றார். பத்திரிகை, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் ஒவ்வொரு செய்தியும் ஒரு நிமிடத்திற்குள் மக்களைச் சென்றடைகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையில் வெளியாகும் செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும். அன்றைய நிலையும் இன்றைய நிலையும் வேறுபட்டவை என்றும் தெரிவித்தார்.

Follow Us