AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விருதுநகரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை: மின்வாரிய பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்!

Virudhunagar Power Outage Incident : விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வின்போது திடீர் மின்தடை ஏற்பட்டது சர்ச்சையான நிலையில் மின்வாரிய இளநிலை பொறியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்களின் முரணான தகவல் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

விருதுநகரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை: மின்வாரிய பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்!
விருதுநகரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Nov 2026 20:04 PM IST

விருதுநகர், நவம்பர் 15 : விருதுநகர் (Virudhunagar) ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வின்போது திடீர் மின்தடை ஏற்பட்டது சர்ச்சையான நிலையில் மின்வாரிய இளநிலை பொறியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவம்பர் 14, 2026 சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடுவே ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான வீடியோ வைரலானது.

விருதுநகரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை

இந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக மின்வாரிய இளநிலை பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது. . அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை கஎடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நவம்பர் 18, 19 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம் – எங்கெல்லாம் மழை?

முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் நவம்பர் 14, 2026 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவ்வலுகத்திற்கு மின் விநியோகம் தரும் 110/11 kV சூலக்கரை துணை மின் நிலையத்தின் 11 kV VT Mill மின்பாதையில் காலை 10:56 மணிக்கு பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டு நிமிட இடைவெளியில் காலை 10:58 மணிக்கு ஜெனரேட்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மின்விநியோகம் உடனடியாக வழங்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

மின்சார வாரியம் விளக்கத்தால் ஏற்பட்ட முரண்

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மின்வாரிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டான்ஜெட்கோ வெளியிட்ட அறிவிப்பில், விருதுநகர் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட விவகாரத்தில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்விநியோகம் தடைபட்டது. மின்வெட்டு தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தவறான செயலில் ஈடுபட்டதாக மின்வாரிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என விளக்கப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியின் வாக்குமூலத்தால் அடுத்தடுத்த திருப்பம்.. தலைமறைவான நிஷாந்தை தேடும் தனிப்படைகள்!!

முன்னதாக பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டதாக டான்ஜெட்கோ விளக்கமளித்த நிலையில் தற்போது இளநிலை பொறியாளர் வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. விருதுநகர் சம்பவத்தில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் மின்வாரியப் பொறியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow Us