AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Health Tips: குளிர்கால சளியால் காதுகளில் அரிப்பு ஏன்..? சரிசெய்ய முடியுமா?

Cold and Ear Itch: குளிர்கால சளியால் காதுகளில் அரிப்பு, அடைப்பு ஏற்படுவது பொதுவானது. சளி பிடிக்கும்போது, யூஸ்டாக்கியன் குழாய் வீங்கி அடைபடுவதால், காதுக்குள் அழுத்தம் அதிகரித்து அரிப்பை ஏற்படுத்துகிறது. மூக்கு, தொண்டை, காது நரம்பு இணைப்பும் ஒரு காரணம். சூடான நீராவி, உப்பு நீரில் வாய் கொப்பளித்தல், நிறைய வெந்நீர் அருந்துதல் போன்ற எளிய வழிகள் நிவாரணம் தரும். தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

Health Tips: குளிர்கால சளியால் காதுகளில் அரிப்பு ஏன்..? சரிசெய்ய முடியுமா?
காது அரிப்புImage Source: pexels
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2026 18:41 PM IST

குளிர்கால வானிலை (Winter) மாற்றத்தால், பெரும்பாலானோர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதன்போது, அதீத குளிரும் உடல்நலத்தை பாடாய்ப்படுத்தும். இந்தநிலையில், ஒரு சிலருக்கு சளி பிடித்திருக்கும்போது காதுகள் அரிப்பு (Ear Itch) அல்லது குடைச்சல் போன்றவை ஏற்படுவதை கவனித்திருப்போம். ஒருபுறம், சளியால் அவதிப்படும் ஒருவருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, அவர் அதிகமாகத் தும்முகிறார். அதே சமயம், காதுகளில் ஒருவித கூச்ச உணர்வும் ஏற்படும். இந்தநிலையில், இதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்வோம்.

ALSO READ: சளி, இருமல் வராமல் தடுக்க.. குளிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

சளி பிடித்திருக்கும்போது காதுகளில் அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நமது காதுகளையும் தொண்டையின் பின்புறத்தையும் இணைக்கும் யூஸ்டாக்கியன் குழாய் எனப்படும் ஒரு சிறிய குழாய்தான். உங்களுக்கு சளி பிடித்திருக்கும்போது, ​​மூக்கும் தொண்டையும் வீங்கி, சளி தேங்கிவிடும். இந்த வீக்கம் யூஸ்டாக்கியன் குழாயை அடைகிறது.

குழாயில் அடைப்பு:

வீக்கத்தின் காரணமாக இந்தச் சிறிய குழாய் மூடிக்கொள்வதால், காதிலிருந்து காற்றும் திரவமும் வெளியேற முடியாமல் போகிறது.

அழுத்த மாற்றங்கள்:

காதுக் குழாயில் ஏற்படும் அடைப்பு, செவிப்பறைக்குப் பின்னால் அழுத்தத்தை உண்டாக்கி, காதில் கனமான உணர்வு, அடைப்பு அல்லது கடுமையான அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

நரம்புகளின் மீதான தாக்கம்:

காதுகள், மூக்கு மற்றும் தொண்டை ஆகியவை ஒரே நரம்பு மண்டலத்தால் இணைக்கப்பட்டுள்ளதால், தொண்டை அல்லது மூக்கில் ஏற்படும் எரிச்சல், காதில் அரிப்பாக உணரப்படலாம்.

சளி அதிகமாக உண்டாகி காதுகளில் அடைப்பு அல்லது அரிப்பு பிரச்சனையை சந்தித்தால், உடனடி நிவாரணம் பெறுவதற்கான வழிகள்..

நிவாரணம் பெற எளிய வழிகள்:

  • சூடான நீராவியை உள்ளிழுக்கவும், இது சுவாசப் பாதைகளைத் திறக்கும்.
  • வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு கொண்டு வாய் கொப்பளிக்கவும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள, நிறைய வெந்நீர் அல்லது சூப் அருந்தவும்.
  • உடலில் நீர்ச்சத்து மற்றும் உடல் வெப்பநிலையை தக்கவைத்துக் கொள்ள, நிறைய வெந்நீர் அல்லது சூப் அருந்தவும்.

ALSO READ: குளிர்காலத்தில் சரும வறட்சியா..? சரிசெய்யும் 7 இயற்கை பொருட்கள்..!

செய்யக்கூடாதவை:

உங்கள் காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, ​​இயர்பட்ஸ், தீக்குச்சிகள் அல்லது வேறு எந்தக் கூர்மையான பொருளையும் காதுக்குள் ஒருபோதும் செருகாதீர்கள், ஏனெனில் இது செவிப்பறையைச் சேதப்படுத்தும். எனவே, இந்த விஷயத்தில் கவனம் கொள்வது முக்கியம். இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து, உங்களுக்குக் காதில் வலி அல்லது சீழ் வடிதல் ஏற்படத் தொடங்கினால், நீங்கள் ஒரு காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரை அணுக வேண்டும்.

 

Follow Us