AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூகுளுக்கு போட்டி.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!

AI-Powered Platform for Businesses and Users | ஓபன் ஏஐ நிறுவனம் ஏற்கனவே சாட்ஜிபிடி மூலம் பல்வேறு அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பிசினஸ் ஹப் என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுளுக்கு போட்டி.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Nov 2026 18:00 PM IST

தொழில்நுட்பம் (Technology) நாளுக்கு நாள் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தொழில்நுட்பத்தில் உலகையே கலக்கும் அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உள்ளது. மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தில், மேலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கூகுளுக்கு (Google) போட்டியாக சாட்ஜிபிடி (ChatGPT) புதிய சேவை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன சேவை அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிசினஸ் ஹப் என்ற சேவையை தொடங்கிய சாட்ஜிபிடி

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஓபன் ஏஐ (Open AI) உள்ளது. இந்த நிறுவனம் தனது பயனர்களுக்கு என பிரத்யேகமான, பயனுள்ள பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள தனது 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பாலமாக இருக்கும் வகையில், பிசினஸ் ஹப் (Business Hub) என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் டுயோவில் 1 லட்சம் செயலிகளை பயன்படுத்தலாம்.. ஆப்பிள் முக்கிய தகவல்!

பிசினஸ் ப்ரொஃபைலாக வைக்கலாம்

ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ள இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வர்த்தகத்தையும், சேவைகளையும் சாட்ஜிபிடி தளத்தில் பிசினஸ் ப்ரொஃபைலாக வைக்க முடியும். தற்போது இந்த சேவை பீட்டா அளவில் உள்ளது. இந்த நிலையில் தான், விரைவில் இந்த சேவையை உலகம் முழுவதும் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : புதிய ஏஐ இமேஜ் எடிட் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்.. அதுவும் ஐபோன் பயனர்களுக்கு மட்டும்!

சிறப்பு அம்சத்தின் பயன்கள் என்ன என்ன?

ஓபன் ஏஐ-ன் இந்த சிறப்பு அம்சத்தில் பல்வேறு பலன்கள் உள்ளன. அதாவது, ஓபன் ஏஐ-ன் சாட்ஜிபிடியை பயன்படுத்தும் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களும் பொருட்களை தேடவோ, ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை ஒப்பீடு செய்யவோ, அதன் விலைகளை ஒப்பீடு செய்யவோ முடியும். இந்த அம்சம் கூகுள் நிறுவனத்தின் டிஸ்கவரி அம்சத்திற்கு இணையாக உள்ளது. இதன் காரணமாக ஓபன் ஏஐ-ன் இந்த அம்சம் கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக மாறியுள்ளது.

Follow Us