AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய ஏஐ இமேஜ் எடிட் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்.. அதுவும் ஐபோன் பயனர்களுக்கு மட்டும்!

WhatsApp AI Image Editor for iPhone | மெட்டா தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஐபோன் பயனர்களுக்காக புகைப்படங்களை எடிட் செய்யும் அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய ஏஐ இமேஜ் எடிட் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்.. அதுவும் ஐபோன் பயனர்களுக்கு மட்டும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2026 17:24 PM IST

மெட்டா (Meta), வாட்ஸ்அப்பில் (WhatsApp) அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது ஐபோன் (iPhone) பயனர்களுக்கான அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான பணியில் இறங்கியுள்ளது. அதாவது, ஐபோன் பயனர்கள் தங்களது புகைப்படங்களை எளிதில் எடிட் செய்துக்கொள்ள வழிவகை செய்யும் விதமாக ஏஐ இமேஜ் எடிட்டட் அம்சத்தை (AI Image Edit Feature) அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய ஏஐ இமேஜ் எடிட் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

புகைப்படம் எடுக்கும் பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் ஒரு எண்ணம் தான், அந்த புகைப்படத்தின் பேக்கிரவுண்ட் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது. அது ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை. செயலிகள் மூலம் எடிட் செய்து பேக்கிரவுண்டை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உங்கள் புகைப்படத்தின் பேக்கிரவுண்டை வாட்ஸ்அப் செயலி மூலமே மாற்றம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும். அத்தகைய அம்சத்தை தான் மெட்டா, வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : வெறும் ரூ.15-க்கு அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ!

புதிய அம்சம் : WABetaInfo கூறுவது என்ன?

WABetaInfo-வை பொருத்தவரை, இந்த புதிய அம்சம் தற்போது குறிப்பிட்ட ஐபோன் பயனர்களையே சென்று சேர்கிறது. இதற்காக மெட்டா செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை பயன்படுத்துகிறது. ஒரு புகைப்படத்தின் பக்கவாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது, கூடுதலான விஷுவல் எலமண்ட்களை (Visual Elements) சேர்ப்பது மற்றும் புகைப்படத்தை மாற்றம் செய்யாமலே அதனை பெரியதாக்க மாற்றுவது ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : ஐபோன் Duo-க்கு Shortage.. இப்போது ஆர்டர் செய்தால் 2027-ல் தான் கிடைக்கும்.. ஆப்பிள் கூறுவது என்ன?

இந்த அம்சம் எப்படி செயல்படும்?

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் கொடுக்கப்பட்டுள்ள Drawing Editor பகுதியில் இடம்பெற்று இருக்கும். இந்த பகுதியில் பயனர் ஏதேனும் ஒரு புகைப்படத்தை சாட்டுக்கு ஷேர் செய்ய முயன்றால் அதில் இந்த அம்சம் தோன்றும். அந்த பகுதியில் புகைப்படத்தை பெரியதாக மாற்றுவது உள்ளிட்ட புகைப்படங்களை எடிட் செய்யும் அம்சங்களை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் எந்த புகைப்படம் என தேர்வு செய்த பிறகு மெட்டா ஏஐ ஒருசில நிமிடங்களில் உங்கள் புகைப்படத்தின் Expanded Version-ஐ உங்களுக்கு வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us