
வாட்ஸ்அப் என்பது ஒரு பிரபலமான மெசேஜிங் செயலி. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கிறது. விரைவாகவும், எளிதாகவும் மேசேஜ் அனுப்ப, படங்கள், வீடியோக்கள், ஆடியோ, லொகேஷன் மற்றும் ஆடியோ/வீடியோ கால் செய்ய இந்த வாட்ஸ் அப் செயலி பெரிதும் கைகொடுத்திருக்கிறது. 2009ஆம் ஆண்டு ப்ரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் ஆகியோர் இதை உருவாக்கினர். 2014ல், ஃபேஸ்புக் நிறுவனமான Meta இந்த செயலியை வாங்கியது. வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சம் End-to-End Encryption. இதனால், உங்கள் மெசேஜ் நீங்கள் அனுப்பும் நபர் மட்டுமே படிக்கக்கூடியதாக இருக்கிறது . இந்த அம்சம் வாட்ஸ்அப்பை மிகவும் பாதுகாப்பான செயலியாக மாற்றியிருக்கிறது. மேலும் வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் நீங்கள் உங்கள் பிடித்த திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றை பின்தொடரலாம். முக்கிய அறிவிப்புகள், அப்டேட்கள் வாட்ஸ்அப் மூலம் உடனுக்குடன் கிடைக்கும். மேலும் தற்போது வாட்ஸ்அப் மூலம் இணையதளத்திலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். இதன் மூலம் உங்கள் கணினியிலிருந்தே மெசேஜ் அனுப்ப முடியும். மேலும் இது தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் கிடைக்கிறது. வாட்ஸ்அப் தொடர்பான அப்டேட் செய்திகளை நாம் இங்கு காணலாம்.
நம் பெயர் தெரியாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி? இதோ 3 டிரிக்ஸ்
WhatsApp Trick : சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது நம் பெயர் தெரியக் கூடாது என நினைப்பார்கள். அதனை மூன்று வழிகளில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நம் பெயர் தெரியாமல் பார்க்க முடியும். அது குறத்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Sep 17, 2025
- 19:07 pm IST
WhatsApp : ஐபோன் மற்றும் மேக் பயனர்களை குறிவைத்து நடைபெறும் மோசடி.. வாட்ஸ்அப் எச்சரிக்கை!
WhatsApp Scam Alert | வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல வகையான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சில பயனர்களை மட்டும் குறி வைத்து ஸ்பைவேர் தாக்குதல் நடைபெற்று வருவதாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Sep 7, 2025
- 21:21 pm IST
WhatsApp : இன்ஸ்டாகிராமை தொடந்து வாட்ஸ்அப்பிலும் வரும் Close Friends அம்சம்!
WhatsApp Status Update | வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு புதிய அம்சம் குறித்து வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியை போலவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் க்ளோஸ் பிரண்ட்ஸை இணைப்பது தான்.
- Vinalin Sweety
- Updated on: Sep 2, 2025
- 18:44 pm IST
வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் – இது தெரிஞ்சா நீங்க தான் மாஸ்டர்
WhatsApp : வாட்ஸ்அப் வெறும் மெசேஜிங் செயலி மட்டுமல்ல. அதில் வீடியோ கால் முதல் யூடியூப் மூலம் பணம் அனுப்பும் வசதி வரை பல சேவைகளை பெற முடியும். இந்த கட்டுரையில் வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் குறித்து பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Sep 1, 2025
- 18:23 pm IST
WhatsApp : வாட்ஸ்அப்பில் ஏஐ உதவியுடன் பிழையின்றி குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
WhatsApp New Feature | மெட்டா நிறுவனம் தனது பயனர்களின் நலனுக்காக வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் ஏஐ அம்சத்துடன் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- Vinalin Sweety
- Updated on: Aug 29, 2025
- 20:30 pm IST
32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு
Chennai Corporation Whatsapp Services: சென்னை மாநகராட்சி மக்களுக்கான சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக வழங்கும் அம்சத்தை தொடங்கி வைத்துள்ளது. இதன் மூலம், இனி மக்கள் அரசு திட்டங்களை பெறவும், சான்றிதழ்களை வாங்கவும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. சென்னை மாநகராட்சியின் எண்ணுக்கு வணக்கம் என்று அனுப்பு உங்கள் சேவைகளை வீட்டில் இருந்தப்படியே பெற்றுக் கொள்ளலாம்.
- Umabarkavi K
- Updated on: Aug 26, 2025
- 07:58 am IST
உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!
Fake Invitation Scam in WhatsApp | தொழில்நுட்பம் மற்றும் சமூல ஊடகங்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் போலி திருமண அழைப்பிதழ் அனுப்பி ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Aug 24, 2025
- 10:11 am IST
WhatsApp : வாட்ஸ்அப்பில் வந்த கால் ஷெட்யூலிங் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
WhatsApp Call Scheduling | வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், தனது பயனர்களின் வசதிக்காக அந்த நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கால் ஷெட்யூலிங் அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Aug 21, 2025
- 12:29 pm IST
கூகுள் மீட், ஜூம் போல வீடியோ கால் செய்ய புதிய வசதி – வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அப்டேட்
Update: : உலக அளவில் இன்று வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத செயலியாக மாறி வருகிறது. வெறும் செயலியாக இருந்த இந்த செயலி, விடியோ கால் முதல் யுபிஐ வரை பல சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பின் புது அப்டேட் குறித்து பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 17, 2025
- 21:00 pm IST
WhatsApp : வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள ஸ்கிரீன் மிரரிங் பிராடு.. எச்சரிக்கும் ஒன்கார்டு நிறுவனம்!
WhatsApp Screen Mirroring Fraud | வாட்ஸ்அப் செயலி மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடி சம்பவம் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Aug 17, 2025
- 12:02 pm IST
லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதீங்க – எச்சரிக்கும் மத்திய அரசு – காரணம் என்ன?
WhatsApp Web Alert : வாட்ஸ்அப் இன்று தவிர்க்க முடியாத செயலியாக மாறி வருகிறது. குறிப்பாக வேலை சார்ந்து நம் பணியாற்றும் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் அலுவலக லேப்டாப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Aug 16, 2025
- 20:50 pm IST
WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!
6.8 Million Fraud WhatsApp Accounts Deleted | வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மோசடி சம்பவங்களில் இருந்து பயனர்களை பாதுகாக்கும் வகையில் இரண்டு புதிய அம்சங்களை மெட்டா சோதனை செய்து வருகிறது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Aug 7, 2025
- 11:30 am IST
WhatsApp : வாட்ஸ்அப் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிடும் அரசு?.. உண்மை என்ன?.. PIB கூறுவது இதுதான்!
WhatsApp Monitoring Guidelines | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், வாட்ஸ்அப் செயலிகள் குறித்து அரசு புதிய வழிமுறைகளை வெளியிட உள்ளதாகவும், அதன்படி பயனர்களின் உரையாடல்கள் மற்றும் குரல் செய்திகளை அரசு சேகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Aug 4, 2025
- 19:43 pm IST
வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்
WhatsApp Update Alert: வாட்ஸ்அப் அனைவரும் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத செயலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக உறவுகளை வளர்க்க, அலுவலக பணிகளை மேற்கொள்ள என நம் அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸஅப் அழைப்புகளை சில நேரம் தவறவிடும் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாட்ஸ்அப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Aug 3, 2025
- 20:23 pm IST
வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்
WhatsApp New Feature Update : வாட்ஸ்அப்பில் இனி நேரடியாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போட்டோக்களை மாற்ற முடியும். இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் எப்படி செயல்படும் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jul 29, 2025
- 19:13 pm IST