ஐசிசி டி20 தரவரிசை – மோசமான ஃபார்மிலும் முதலிடத்தில் அபிஷேக் சர்மா, டாப் 10ல் பும்ரா
ICC Ranking : டி20 உலகக்கோப்பை 2026 தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள புதிய சர்வதேச டி20 வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2026 தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள புதிய சர்வதேச டி20 வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த உலகக்கோப்பை டி20 தொடரில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆகி விமர்சனத்துக்குள்ளான அபிஷேக் சர்மா, தற்போது வெளியான ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இடம் பிடித்து ஆச்சரியமளித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்காத நிலையிலும், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் அபிஷேக் சர்மா
இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா லீக் சுற்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சூப்பர் 8 பிரிவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் எதிர்பார்த்த அளவுக்கு அவர் விளையாடவில்லை. இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பிப்ரவரி 25, 2026 அன்று வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார். மோசமான ஃபார்மில் உள்ள நிலையிலும் அவர் முதலிடத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : அரையிறுதிக்கு போகுமா இந்தியா? ஜெயிச்சா மட்டும் போதாது.. எந்த டீம் ஜெயிச்சா இந்தியாவுக்கு லாபம்?




அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பில் சால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அபிஷேக் சர்மா தற்போது 62 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன், சமீப காலமாக சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 176 ரன்கள் எடுத்துள்ள அவர் இந்திய அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.
மேலும் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாகா ஃபர்ஹான் இரண்டு இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் டிவால் பிரெவிஸ் 10 இடங்கள் முன்னேறி 9வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஷத்ரான் 13வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க : T20 World Cup: இங்கிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வி.. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா? இதோ முழு விவரம்!
அதே போல ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஜிம்பாவே அணியில் சிக்கந்தர் ரசா மீண்டும் முதலிடத்தில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவின் ஹார்திக் பாண்ட்யா 3வது இடத்திலும், சிவம் துபே 7வது இடத்திலும் உள்ளனர். அதே போல பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் உள்ளார். அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஐஸ்பிரித் பும்ரா 7 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்தார்.