ஜிம்பாப்வே போட்டிக்காக இந்திய அணியில் பெரிய மாற்றம்? சாம்சன் இடம்பெற வாய்ப்பு
Samson Set Return : டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் முக்கிய மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி ஜிம்பாவே அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்தப் போட்டி வருகிற பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்திய அணி இந்த போட்டியில் ஜிம்பாவே அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய அணியில் ஏற்படப்போகும் மாற்றம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இடம் பெறாத இந்திய அணியின் துணைக் கேப்டன் அக்சர் படேல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும், புந்து வீச்சிலும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதன் காரணமாக அவரை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இந்திய அணியின் அதிர்ச்சித் தோல்வியும்.. சர்ச்சையான அணித் தேர்வும்.. விமர்சனத்திற்கு ஆளான கம்பீர், சூர்யகுமார்!!




அதனைத் தொடர்ந்து திலக் வர்மா, அபிஷேக் சர்மா, மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் இடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. திலக் வர்மா சில போட்டிகளில் ரன்கள் எடுத்தாலும், அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலைகளில் சொதப்பினார். அதே போல ரிங்கு சிங்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதனால் அவர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே போல தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ர்மா இந்த தொடரில் மோசமான ஃபார்மில் உள்ளார். முதல் 3 போட்டிகளில் ரன் எடுக்காமல் வெளியேறிய அவர், மொத்தமாக மிகக் குறைந்த ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது இடமும் கேள்விக்குறியுள்ளாகியுள்ளது.
மேலும் திலக் வர்மா, அபிஷேக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோ 3 பேரில் ஒருவர் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்துகளில் அதிரடியாக ரன்கள் எடுத்திருந்த சாம்சன், அணியில் சேர்க்கப்பட்டால், ஓபனிங்கில் வலது-இடது கை பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் உருவாகும். மேலும் இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பும் உள்ளது.
பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றம்
இதையும் படிக்க : India vs Zimbabwe T20 WC: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் ‘பிளேயிங் 11’.. கவாஸ்கர் கொடுத்த ஐடியா!!
மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் குல்தீப் யாதவுக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து இரண்டு சுழற்பந்து வீச்சு தாக்குதலை இந்தியா வழங்கவுள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் குல்தீப் யாதவுக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. வருண் சக்ரவர்த்தியுடன் இணைந்து இரட்டை சுழற்பந்து தாக்குதலை இந்தியா பயன்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. மேலும் இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.