IND vs SL: மழையால் அடிக்கடி தடை.. இந்தியா – இலங்கை போட்டியில் வெற்றி யாருக்கு..? ஐசிசி விதிகள் கூறுவது என்ன?
IND vs SL 1st Test Weather: மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டால், இழந்த நேரத்தை முடிந்தவரை ஈடுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கமாக, ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் விளையாடுவதே இலக்காகும். ஆனால், மழையின் காரணமாக இது சாத்தியமில்லாமல் போனால், அன்றைய ஆட்ட அட்டவணை மாறக்கூடும்.
இந்தியா-இலங்கை டெஸ்ட் (IND vs SL) போட்டியை மழை பாதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விதிகள் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படுமா அல்லது இலக்கு மாற்றப்படுமா என்பதையும் அறிய ரசிகர்களிடம் ஆவல் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் (Test Cricket) ஐந்து நாள் போட்டியின் போது மழையால் ஆட்டம் நிறுத்தப்படுவது சகஜம். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மழை தொடர்பான விதிகள் என்ன, போட்டியின் முடிவு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ALSO READ: தூரமாய் சென்ற பந்து.. துரத்தி தாவி பிடித்த கில்.. இணையத்தில் வட்டமடிக்கும் வீடியோ!
டெஸ்டில் மழை பெய்தால் என்ன நடக்கும்..?
இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலி ஸ்டேடியத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மழையானது போட்டியை அடிக்கடி பாதிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. வானிலை மையத்தின் தகவலின்படியே போட்டி நடைபெற்ற 3 நாட்களிலும் மழையானது அடிக்கடி போட்டிக்கு இடையே வந்து இடையூறு செய்தது. இது மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. அந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மழை பெய்யும்போது டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறை பொருந்தாது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போலல்லாமல், ஒரு டெஸ்ட் போட்டியில் மழையின் காரணமாக அணியின் இலக்கு மீண்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை.




மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டால், இழந்த நேரத்தை முடிந்தவரை ஈடுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கமாக, ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் விளையாடுவதே இலக்காகும். ஆனால், மழையின் காரணமாக இது சாத்தியமில்லாமல் போனால், அன்றைய ஆட்ட அட்டவணை மாறக்கூடும்.
மதிய உணவு இடைவேளையின் போது அல்லது அதற்கு அருகில் மழை பெய்தால், சூழ்நிலையைப் பொறுத்து நடுவர்கள் இடைவேளையை முன்கூட்டியே தொடங்கலாம். வானிலை சீரானதும் ஆட்டம் மீண்டும் தொடங்கும். மழையின் காரணமாக ஆட்டம் முழுமையாக நடைபெற முடியாவிட்டால், ஒரு டெஸ்ட் போட்டி சமநிலையில் முடியலாம். இருப்பினும், போட்டியின் போது ஒரு அணி வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழலை உருவாக்கினாலும், மழையின் காரணமாக விதிகள் மாறுவதில்லை. மேலும், சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படுகிறது.
ALSO READ: டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகள்.. சிறப்பு சாதனை பட்டியலில் ஜடேஜா..!
டெஸ்ட் கிரிக்கெட்டில், மழையின்போது DLS போன்ற ஒரு முறை இல்லாததால், நேரம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, நீண்ட நேரம் மழை பெய்தால், 5 நாள் போட்டியில் ஒரு முடிவைப் பெறுவது கடினமாகிவிடும். மேலும், இரு அணிகளும் வெற்றி பெறத் தேவையான ரன்களையும் விக்கெட்டுகளையும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எடுக்க வேண்டியுள்ளது.