AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனிருத் – காவியா மாறனின் திருமண தேதி எப்போது தெரியுமா? – வைரலாகும் பதிவு!

Anirudh - Kaviya Maran Wedding: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் மகளான காவியா மாறனை காதலித்துவருவதாக கூறப்பட்டது. தற்போது இவர்களின் திருமண தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அனிருத் – காவியா மாறனின் திருமண தேதி எப்போது தெரியுமா? – வைரலாகும் பதிவு!
அனிருத் - காவியா மாறன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Aug 2026 20:58 PM IST

சவுத் இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனிருத் (Anirudh). இவரின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனுஷின் (Dhanush) நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவந்தார். இதற்கு பின் இவருக்கு முதல் பிரம்மாண்ட படமாக அமைந்தது கத்தி (Kathi). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) ஹீரோவாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadas) கூட்டணியில் வெளியான இந்த படமானது அனிருத்துக்கு பிரம்மாண்ட ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பின், அவருக்கு தளபதி விஜய், சூர்யா மற்றும் தனுஷ் போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

தற்போது இந்தி சினிமாவில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் நுழைந்த நிலையில், தற்போது அவர் நடிக்கும் கிங் படத்தில் பணியாற்றுகிறார். அனிருத், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனரின் மகள் காவியா மாறனை (Kaviya Maran) காதலித்துவருவதாக கூறப்பட்டது. தற்போது இவர்களின் திருமண தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இது பிக் பாஸ் காமன் மேன் ஷோவா? இல்ல வேறு எதுவுமே?- இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!

அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண தேதி எப்போது:

அனிருத் மற்றும் காவியா மாறனை காதலித்துவருவதாக கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவருமே வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றிவரும் வீடியோக்களும் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவந்தது. மேலும் 2026ம் ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: தங்கமே தளபதி.. முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் எப்போது? வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!

ஆப்ரிக்காவில் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கிரீஸில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவர்களின் திருமணம் 2026ம் நவம்பர் 10ம் தேதியில் நடக்கிறதாக வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணம் குறித்து வைரலாகும் பதிவு:

அனிருத் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இசையில் சிலம்பரசனின் அரசன், நானியின் தி பாரடைஸ், ஷாருக்கானின் கிங், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மற்றும் தர்மன் மற்றும் அல்லு அர்ஜுனின் AA23 போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us