கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி! கோவை எல்லையில் 12 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 23, 2026: கேரள மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திற்குப் பரவாமல் தடுக்கும் வகையில் கோவை மாவட்ட எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சூளைமேட்டில் ஹெராயின் விற்பனை: 4 பேர் கைது! 5 செல்போன்கள் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல்
12 சோதனைச் சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு!
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக வரும் சரக்கு வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க்க: காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்! முதல்வர் விஜய்யிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்!
கோழி, முட்டை ஏற்றி வரும் வாகனங்களுக்குத் தீவிர கண்காணிப்பு!
குறிப்பாக, கோழிகள் மற்றும் பிற பறவைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன, நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து வருகிறதா, எங்கு செல்கின்றன என்பது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும், கோழி எரு, இறைச்சி மற்றும் முட்டைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தொடர் கண்காணிப்பு
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் நோய்த்தொற்று தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் நோக்கில், எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.