AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: 7 ஆண்டுகள், 9 டெஸ்ட் போட்டிகள், 4 கேப்டன்கள்.. வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய அணி!

India's Test Win Drought: நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டும், டிரா ஆனது. இது நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஐந்து வருட டெஸ்ட் வெற்றி காத்திருப்பை நீட்டித்துள்ளது. கடந்த காலத் தொடர் தோல்விகள், கேப்டன் மாற்றங்கள் ஆகியவை இந்தியாவின் வெற்றி வறட்சிக்குக் காரணமா? வரவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

IND vs NZ: 7 ஆண்டுகள், 9 டெஸ்ட் போட்டிகள், 4 கேப்டன்கள்.. வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய அணி!
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2026 22:15 PM IST

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி (IND vs NZ) எதிர்பார்த்ததை விட சிறப்பாக டெஸ்ட் தொடரைத் தொடங்கியுள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 நாட்களும் நியூசிலாந்து அணியை விட அதிக ரன்கள் எடுத்தது. இருப்பினும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியால் (Indian Cricket Team) வெற்றியை பெற முடியவில்லை. டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக 43 ஓவர்கள் பேட்டிங் செய்து இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை சமன் செய்து, இந்திய அணியின் வெற்றியை பறித்தனர்.

ALSO READ: சமனில் முடிந்த போட்டி.. புள்ளி பட்டியலில் பின்னடைவை சந்தித்ததா IND – NZ?

வெற்றிக்காக காத்திருப்பு:

தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியையாவது வெல்வதே ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டது. அந்த வகையில், வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் முடிவு இந்தியாவிற்கு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. இந்திய அணியால் வெற்றி பெற முடியாவிட்டாலும், தோற்கவும் இல்லை. இருப்பினும், இந்த முடிவு நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்காக இந்தியாவின் காத்திருப்பை நீட்டித்துள்ளது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெறவில்லை.

5 வருடங்களாக வெற்றி இல்லை

2021 நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் போட்டி சமனில் முடிந்தது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த தொடர் 2024-ல் நடைபெற்றது. அப்போது நியூசிலாந்து அணி மீண்டும் இந்தியாவிற்கு வருகை தந்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை யாரும் மறக்க மாட்டார்கள். இந்தியாவில் நடைபெற்ற தொடரில், நியூசிலாந்து அணி இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியது.

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி.. எப்போது, எங்கே பார்க்கலாம்..?

9 டெஸ்ட் போட்டிகள், 4 கேப்டன்கள், ஒரே ஒரு வெற்றி

2020-ல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2021-ல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து இந்தியாவைத் தோற்கடித்தது. ஆச்சரியப்படும் விதமாக, இந்தக் காலகட்டத்தில் இந்தியா 4 கேப்டன்களை முயற்சித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலியின் தலைமையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியும் 3 தோல்விகளும் இருந்தன. அதே சமயம், அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. கில்லின் தலைமையில் விளையாடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 27ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்த முறை வெற்றிக்கான காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us