Team India: டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. காம்பீர் ஆறுதல்.. மனவேதனையை பகிர்ந்த சர்பராஸ் கான்!
Sarfaraz Khan's Emotional Battle: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க போராடும் சர்பராஸ் கான், 'டிரெஸ்ஸிங் ரூம் உரையாடல்களைக் கசியவிட்டதாக' எழுந்த குற்றச்சாட்டால் ஏற்பட்ட மனவேதனை குறித்து பகிர்ந்தார். நெருங்கிய நண்பர்கள் கைவிட்ட நிலையில், கௌதம் காம்பீர்தான் தனக்கு ஆதரவு அளித்ததாகக் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகள் என் குடும்பத்தை பாதித்தன, நான் எதுவும் கசியவிடவில்லை என்று விளக்கமளித்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த சர்பராஸ் கான் (Sarfaraz Khan) தற்போது இந்திய அணியில் (Indian Cricket Team) இடம்பிடித்த கடுமையாக போராடி வருகிறார். இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ‘பைத் அவுர் போல்’ நிகழ்ச்சியில், டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த உரையாடல்களைக் கசியவிட்டதாகத் தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது ஏற்பட்ட கடினமான காலம் குறித்து சர்பராஸ் கான் பேசினார். இதை நினைவுகூர்ந்த அவர், தனது நெருங்கிய நண்பர்கள் தனது தொலைபேசி அழைப்புகளை ஏற்பதை நிறுத்திவிட்டதாகவும், கௌதம் காம்பீர்தான் தனக்கு முதலில் அழைத்து ஆதரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ALSO READ: 98 ரன்களில் அவுட்டான கில்.. சதமடித்து சவால்விட்ட கே.எல்.ராகுல்.. 486 ரன்கள் குவித்த இந்தியா!




செய்திகளைக் கசியவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆகாஷ் சோப்ரா கேட்டபோது சர்பராஸ் கான் கூறியதாவது, ”முதலில் இது ஏன் நடந்தது என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே எனக்கு அழைப்புகளும் மெசேஜ்களும் வரத் தொடங்கின. இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவ ஆரம்பித்தது. பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது எனக்குக் காயம் ஏற்பட்டது, நான் என்சிஏ-வில் (NCA) மறுவாழ்வுப் பயிற்சியில் இருந்தேன், அப்போது இந்தச் செய்தி வந்தது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் யாரிடமாவது பேசியிருந்தால், யாரிடம் பேசியிருக்க முடியும்? அப்படியொன்றும் நடக்கவில்லை. அது நடந்திருந்தால், நான் இந்தியா-ஏ அணிக்குத் திரும்பி வந்திருக்க மாட்டேன். நான் அப்போதுதான் இலங்கை சென்றிருந்தேன். அப்படியிருக்க, இது சமூக ஊடகங்களில் எப்படிப் பரவியது? எனக்குத் தெரியாது. ஆனால், அந்த நேரத்தில் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.” என்றார்.
யாரும் என்னுடன் பேசுவது கிடையாது..
🔴DRESSING ROOM NEWS CONTROVERSY: GAMBHIR CALLED SARFARAZ PERSONALLY 🤯
🎙️: After allegations that Sarfaraz Khan leaked dressing-room news, he was under a lot of stress. Gautam Gambhir personally called him and advised him not to get involved in unnecessary politics and to focus only on his cricket.
Gambhir also spoke to Sarfaraz’s father and reassured his family during the difficult time. ❤️👏
— Sam (@cricsam02) November 20, 2026
தன்னை ஒதுக்கியது குறித்து பேசிய சர்பராஸ் கான், “இதுபோன்ற நேரங்களில் யாரும் தொலைபேசியைக் கூட எடுப்பதில்லை. அது என் குடும்பத்திற்கு மிகவும் மோசமான நேரமாக இருந்தது. என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் உள்ளன, அதனால் என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் என் தந்தையை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. என் மனைவி கடுமையாக அழுதார், என் சகோதரர் மற்றும் என் தாயை நினைத்தும் வருத்தமாக இருந்தது. ஒரு சிறிய விஷயம் கூட சமூக ஊடகங்களில் ஒரு பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.
ALSO READ: நியூசிலாந்தில் முதல் டெஸ்ட் சதம்.. இந்திய ஜாம்பவான்கள் வரிசையில் கே.எல். ராகுல்!
2 நாட்கள் கழித்து கௌதம் காம்பீர் சாரிடமிருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாதே, இதெல்லாம் அரசியல்” என்று ஆறுதல் கூறினார். அதற்கு நான், “என் தந்தை சோகமாக இருப்பதாகவும், என் மனைவி அழுது கொண்டிருப்பதாகவும் சொன்னேன். உடனே சார் என் தந்தையிடம் பேசி, அவருக்கு விளக்கிக் கூறி, ‘அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், அவரை விளையாட விடுங்கள், அந்த விஷயங்களில் கவனம் செலுத்த விடாதீர்கள்” என்று தெரிவித்தார்.