Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Indian Cricket Team

Indian Cricket Team

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறது. இது ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்க்ர்ட் அரங்கில் டீம் இந்தியா மற்றும் மென் இன் ப்ளூ போன்ற பெயர்களிலும் அன்போடு அழைக்கப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் 1000க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில அணிகளில் இதுவும் ஒன்று. ஒட்டுமொத்தமாக, இந்திய கிரிக்கெட் அணி தற்போது சுமார் 1800க்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்திய ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவும், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும் கேப்டனாக உள்ளனர். டெஸ் கிரிக்கெட் அணிக்கு விரைவில் கேப்டன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும், 2007 மற்றும் 2024 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வகிக்கப்படுகிறது

Read More

IND vs SA: கலக்கிய ஜடேஜா- குல்தீப் கூட்டணி.. 97 ரன்களில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

IND vs SA 1st Test Day 2: தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Shubman Gill: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

India - South Africa 1st Test: சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார் . கில்லுக்கு ஏற்பட்ட இந்த கழுத்து பிரச்சனையின் தீவிரம் அவரது பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும்.

IND vs SA: இந்திய அணிக்கு குடைச்சல் கொடுக்கும் சுழற்பந்து.. தென் ஆப்பிரிக்காவின் ஐடியா இதுவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது, இந்த முறை நடப்பு உலக சாம்பியனான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் நவம்பர் 14யான இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்று பார்க்கலாம்

IND vs SA 1st Test: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்.. குறுக்கே புகுந்து ஆட்டத்தை கெடுக்குமா மழை?

IND vs SA 1st Test Weather Report: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மழை பெய்யும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை. பகல்நேர வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SA 1st Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எப்போது? இலவச​​மாக எங்கு பார்க்கலாம்..?

IND vs SA 1st Test Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2025 நவம்பர் 14ம் தேதியான நாளை தொடங்கி வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும்.

India vs South Africa 1st Test: கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!

Shubman Gill: இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு, அதன் வடிவங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்தனர்.

Nitish Kumar Reddy: முதல் டெஸ்டில் இருந்து ஆல்ரவுண்டர் நீக்கம்.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு! காரணம் என்ன?

India vs South Africa Test Series: முதல் போட்டிக்கான அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டதன் மூலம், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. காயத்திற்குப் பிறகு ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

IND vs SA ODI Series: இந்திய அணியில் விளையாட வேண்டுமா..? ரோஹித், கோலிக்கு செக் வைத்த பிசிசிஐ!

Rohit Sharma - Virat Kohli: வருகின்ற 2025 டிசம்பர் 24 முதல் தொடங்கும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, வருகின்ற 2025 நவம்பர் 30 முதல் தொடங்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

IND vs SA Test Series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர்.. யார் அதிக ஆதிக்கம்..?

IND vs SA Test Head To Head: இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 1992-93ம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கியது. இந்திய அணி 4 டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்கா சென்றது. இதில், தென்னாப்பிரிக்கா 1-0 என வென்றது. 1996-97 இல், தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் தொடருக்காக இந்தியா வந்தது. அதில், இந்திய அணி 2-1 என வென்றது.

Shreyas Iyer Injury: 50 சதவீதமாக குறைந்த ஆக்ஸிஜன் அளவு.. ஷ்ரேயாஸை எடுக்க தயங்கும் பிசிசிஐ.. இந்திய அணியில் இடமில்லையா?

IND vs SA ODI Series: அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த ஒருநாள் தொடருக்கான அணியை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் இடம் கை பேட்ஸ்மேனான திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கலாம்.

Sanju Samson Birthday: ஏற்றதாழ்வு.. விடாமுயற்சியுடன் போராட்டம்.. சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் பயணம்!

Happy Birthday Sanju Samson: 2011ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் அறிமுகமானார், அடுத்த ஆண்டு அதாவது 2012ம் ஆண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அவரது அற்புதமான ஆட்டத்தால் 2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

IND vs SA Test Series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் எப்போது? முழு விவரம் இதோ!

IND vs SA Test Series Date Time: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதான வளாகத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை.. போட்டிகளுக்காக 5 மைதானங்கள் தேர்வு..

T20 World Cup: டி20 உலகக்கோப்பை போட்டியில் முக்கிய போட்டிகளுக்கான இடங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இறுதி போட்டி மற்றும் பிற போட்டிகள் நடைபெறவுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதி போட்டியை பொருத்தவரையில், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்

India – Australia T20 Series: கடைசி போட்டியில் ஆடாமல் வெற்றி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

IND vs AUS 5th T20: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 3வது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Olympics 2028: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?

Olympics Cricket Team Qualification: ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் விளையாடப்படும். இதில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் போட்டிகள் உட்பட மொத்தம் 28 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 2028 ஜூலை 12ம் தேதி முதல் தொடங்க அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.