Ind vs WI: வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான வாழ்வா-சாவா போட்டி.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சாதகம்..
T20 World Cup 2026 India Vs West Indies: 2026 டி20 உலகக்கோப்பை தொடர் அதன் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில், மார்ச் 1-ம் தேதி (நாளை) கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பையின் (T20 World Cup 2026) கடைசி ‘சூப்பர் 8’ போட்டி மார்ச் 1-ம் தேதி (நாளை) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை (India vs West Indies) எதிர்கொள்ளத் தீவிரமாக தயாராகி வருகிறது. இது இரு அணிகளுக்கும் ஒரு வாழ்வா-சாவா போட்டியாகும் (virtual quarter-final). இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். போட்டி தொடங்குவதற்கு முன்பே, அன்றைய தினத்திற்கான ஆடுகளத்தின் தன்மை குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது, இது இந்தியாவுக்குப் பெரும் சாதகமாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: IndvsWI: வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் – கவாஸ்கர் கடும் எச்சரிக்கை
பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான ஆடுகளம்:
அதன்படி, ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவும், அதிக ரன்கள் குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதே ஆடுகளத்தில்தான் இந்த உலகக்கோப்பையின் முதல் 200+ ரன்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி இதே பிட்ச்சில் 207/4 ரன்களைக் குவித்தது. மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் (CAB) தலைவர் சவுரவ் கங்குலி, ஆடுகளத்தைப் பார்வையிட்டு, தலைமை பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி மற்றும் ஆஷிஷ் பௌமிக் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆடுகளத்தின் தயாரிப்பைக் கண்டு கங்குலி மகிழ்ச்சியடைந்தார்.
பேட்டிங் டிராக் இந்தியாவுக்கு ஏன் சாதகமானது?
இந்த 2006 உலகக்கோப்பையில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாட இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. ஆனால், பேட்டிங்கிற்குச் சாதகமான சென்னை ஆடுகளத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே, ஈடன் கார்டனின் சமதளமான பேட்டிங் விக்கெட் இந்தியாவிற்குப் பெரும் பலமாக இருக்கும்.
மே.இ.தீவு அணியை குறைத்து மதிப்பிட முடியாது:
இருப்பினும், மேற்கிந்திய தீவுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் பேட்டிங் வரிசை 9-வது வீரர் வரை அதிரடி மன்னர்களைக் கொண்டுள்ளது. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 9-வது வரிசையில் களம் இறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் அரைசதம் விளாசினார். குறிப்பாக, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் போன்ற ரன் குவிப்பிற்கு சாதகமான ஆடுகளங்களில், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல் மற்றும் ரோவ்மன் பவல் போன்ற ‘பவர் ஹிட்டர்கள்’ ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர்கள்.
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 26 ரன்கள்.. விசித்திரமான நோ-பால்.. ரசிகர்களைக் கடுப்பேற்றிய துபே!
இவர்களுடன் மிடில் ஆர்டரில் ஷாய் ஹோப் போன்ற நிதானமான வீரர்களும் இருப்பதால், அந்த அணி இமாலய இலக்குகளை எட்டவும், கடினமான இலக்குகளைத் துரத்தவும் தகுதியுடைதாக விளங்குகிறது. எனவே, அவர்களும் இந்த பேட்டிங் டிராக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.