கடன் தள்ளுபடி வரை வங்கிக் கடனை செலுத்த மாட்டோம்: விவசாயிகள் தீர்மானம்
கோவை கணுவாய் அருகே சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதியின்படி தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை செலுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினர். அனைவருக்கும் பாரபட்சமின்றி முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி வலியுறுத்தினார்.

Follow Us