Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Aadi Masam

Aadi Masam

ஆடி மாதம் என்பது தமிழ் மாத நாட்காட்டியின்படி 4வது மாதமாகும். இம்மாதம் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சூரிய பகவான் இம்மாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களுக்குரிய காலமாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான அம்மன் கோயில்களில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என நடைபெறும். ஆடி மாதம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இந்த காலக்கட்டம் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி என பல சிறப்பு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆடி மாதம் ஆன்மிக சுற்றுலாவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னோர் வழிபாட்டில் மிக முக்கிய விசேஷ நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசையும், சுமங்கலி பெண்களின் மிக முக்கிய நாளான கடைசி வெள்ளிக்கிழமை சுமங்கலி விரதமும் என முக்கிய தினங்களும் வருகிறது. அப்படியான ஆடி மாதம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

2025 ஆம் ஆண்டின் ஆடி வெள்ளிக்கிழமைகள் ஜூலை 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1, 8, 15 ஆகிய தேதிகளில் வருகின்றன. ஆடி மாதம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது; வெள்ளிக்கிழமை பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. ஆடி வெள்ளியில் வழிபாடு செய்வதால் எதிர்மறை சக்திகள் அகன்று, ஆரோக்கியம், செல்வம், அறிவு, செழிப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Astrology: 2027 வரை சனியின் பார்வையால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம்!

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்படி கணித்தால், 2026-2027 காலகட்டத்தில் சனி பெயர்ச்சியால் மிதுனம், மகரம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவானின் செல்வாக்கு இவர்களுக்கு நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது.

Aadi Month: 2025 ஆடி மாதப் பிறப்பு எப்போது? .. அதன் முக்கியத்துவம் தெரியுமா?

ஆடி மாதம் தமிழர்களின் ஆன்மீக மாதமாகக் கருதப்படுகிறது. பெண் தெய்வ வழிபாடு, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. பண்டைய நம்பிக்கைகளின்படி, இம்மாதத்தில் விதைப்பு நல்ல விளைச்சலைத் தரும் என நம்பப்படுகிறது. ஆடி மாதத்தின் சிறப்புகள் மற்றும் முக்கிய நாட்களைப் பற்றி காணலாம்.