2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
Vastu Tips: எக்காரணம் கொண்டும் வீட்டின் முன் வளர்க்கக்கூடாத 5 செடிகள்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் முன் சில தாவரங்களை வளர்ப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். அரசமரம், முள்செடிகள், போன்சாய் செடி, உலர்ந்த செடிகள் மற்றும் புளியமரம் போன்றவை வீட்டின் முன் இருக்கக் கூடாது. இவை நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 1:13 pm IST
எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!
DMK Mupperum Vizha 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விழாவின் முக்கியத்துவம், விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 12:06 pm IST
விஜய் வாகனத்தை சுத்துப்போட்ட தொண்டர்கள்.. ஸ்தம்பித்த திருச்சி விமான நிலையம்!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து பரப்புரை மேற்கொள்ளும் வாகனத்தில் விஜய் ஏறியவுடன் தொண்டர்கள் படை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை கட்டுப்படுத்த திணறினர்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 11:34 am IST
TVK Campaign: விதிகளை மீறும் தொண்டர்கள்.. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு!
விஜய்யின் திருச்சி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு, காவல்துறையின் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தொண்டர்கள் விதிகளை மீறி பரப்புரை வாகனத்தை பின்தொடர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் விஜய்யை காண ஆர்வத்துடன் கூடினர். இதனால் அரசியல் களம் பேசுபொருளாகியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 11:00 am IST
மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?
ICC Women's Cricket World Cup 2025: 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 13வது ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் விளையாட்டு மைதானங்கள் குறித்த தகவல்களைப் பற்றிக் காணலாம். இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து மைதானங்கள் 31 போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 9:24 am IST
Namakkal: காருக்குள் காதலியுடன் திருமணம்.. சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்!
நாமக்கல் அருகே காதல் ஜோடி காரில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின்பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பொறியியல் மாணவிக்கு அவரது காதலன் காரில் தாலி கட்டினார். சம்பவ இடத்தில் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 8:33 am IST
Tirupathur: சிறுமியுடன் காதல் சண்டை.. பைக் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 19 வயது பைக் மெக்கானிக் சிவநந்தன், காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலியை, குடும்பத்தினரின் எதிர்ப்பால் சந்திப்பதை நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் சந்தித்ததால் பெற்றோர் கண்டித்த நிலையில் அவர் விபரீத முடிவை எடுத்தார் என சொல்லப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 8:04 am IST
மினி பஸ்ஸாக மாறும் மேக்ஸி கேப் வேன்கள்.. தமிழக அரசின் புது முடிவு!
Mini Bus Service: தமிழ்நாடு அரசு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, 12-16 இருக்கைகள் கொண்ட மேக்ஸி கேப் வகை வேன்களை மினி பேருந்துகளாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 7:34 am IST
TVK Vijay: முதல்முறையாக அரசியல் பிரச்சாரம்.. திருச்சியில் தொடங்கும் விஜய்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மாவட்ட வாரியாகத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். திருச்சியில் தொடங்கும் இப்பிரச்சாரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 7:00 am IST
Narendra Modi: 2 ஆண்டுகள் பிரச்னைக்குப் பின் மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி!
PM Modi Manipur Visit: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். ரூ.8,500 கோடி மதிப்பிலான 17 திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.மணிப்பூரின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் இந்த வருகை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 6:36 am IST
Astrology: புதாதித்ய யோகம்.. இந்த 5 ராசிக்கு ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறும்!
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 2 வரை புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு வருமானம், தொழில், குடும்பம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 12, 2025
- 9:16 pm IST
காத்மண்டுவில் ஹோட்டலுக்கு தீ வைத்த போராட்டக்குழு.. இந்திய பெண் பலி!
காத்மாண்டுவில் நடந்த வன்முறையில் இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் கோலா என்பவர் உயிரிழந்தார். நேபாள அரசின் சமூக வலைத்தளத் தடைக்கு எதிரான போராட்டத்தின்போது, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தீ வைக்கப்பட்ட நிலையில் தப்பிக்க முயன்றபோது பலியானார். அவரது கணவர் ராம்வீர் சிங் கோலா காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 12, 2025
- 8:41 pm IST