Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kurnool Accident: பைக் மீது மோதி தீப்பிடித்த பேருந்து.. 20 பேர் பலி?

Andra Pradesh Bus Accident: ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்து அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளானது. பைக் வெடித்ததால் பேருந்து முழுதும் தீ பரவியது. பலர் தூக்க கலக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Kurnool Accident: பைக் மீது மோதி தீப்பிடித்த பேருந்து.. 20 பேர் பலி?
தீப்பிடித்த பேருந்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Oct 2025 08:19 AM IST

ஆந்திரப்பிரதேசம், அக்டோபர் 24: ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் அதில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒரு பைக் மீது மோதியதை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலை 3 மணியளவில் விபத்தை சந்தித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்து வீடியோ


பேருந்து மோதிய நிலையில், பைக் பேருந்தின் அடியில் சென்று வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  இதனால் என்னவென்று சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் 12 பயணிகள் அவசர வழி வழியாக தப்பினர். ஆனால் பல பயணிகள் தீ மற்றும் அதனால் எழுந்த புகையில் வழி தெரியாமல் பேருந்துக்குள் மாட்டிக் கொண்டு அலறினர். இதில் பலர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்து மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read: கென்யாவில் நடந்த பேருந்து விபத்து – 6 இந்தியர்கள் பலி ; அதிர்ச்சி சம்பவம்

இதனையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்றது. காயமடைந்தவர்கள் உடனடியாக கர்னூல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Also Read: நடுவானில் பறந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. அலறிய பயணிகள்!

இதற்கிடையில், கர்னூல் எஸ்பி விக்ராந்த் பாட்டீல் கூறுகையில், பெங்களூருவுக்குச் சென்ற பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்து தீப்பிடித்ததை கண்ட உள்ளூர்வாசிகள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து காப்பாற்ற முயன்றனர். சிலர் தப்பிய நிலையில், பலரால் வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், எஃப்எஸ்எல் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. பேருந்தின் கூடுதல் ஓட்டுநரை நாங்கள் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.